பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


"பேயோடு உறவு கொண்டாலும் பிரிவு அரிது" என்பர்; அதனை விட்டு விலகப் பிடிக்காது; விலங்குகளும் பழகி விட்டால் 'காய்' விட்டுக் கசந்துபோய்விடாது:இசைந்தவர் பிரிதல் என்பது கசந்தது ஆகும். நண்பனிடம் கூடிவிட்டுப் பின் குறை கண்டு அவனை விட்டு ஓடிவிடுவது நாடத் தக்கது அன்று. ஒட்டி உறவாடியபின் வெட்டி ஒதுங்குதல் கெட்டித்தனம் ஆகாது. பிரிந்தவர் பின் கூடினால் பேசவும் முடியாது; அதனால் பிரிவே கூடாது என்பதை மனத்தில் கொள்க. பொறுமை பெருமை தரும்."

பெரியவர்கள் பெரியவர்கள்தான்; தவறுகள் என்பதே தெரிந்து செய்வன அல்ல; தப்பித்தவறிச் செய்தாலும் ஒப்புக் கொண்டு மன்னிக்கும் மாண்பு இவர்களிடம் இருப்பதால்தான் பழகிய பின் யாரும் இவர்களை விட்டுப் பிரிவது இல்லை.

"நச்சு நச்சு என்று செய்யும் தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி அச்சுறுத்திக் கொண்டிருந்தால் யாருமே ஒட்டி நிலைக்க மாட்டார்கள. நண்பர்கள் மட்டும் அன்று; நம்மை நாடி வரும் தொழிலாளர்கள் கூட, கண்டித்துக் கொண்டே இருந்தால் அவர்கள் சண்டை போட்டு விட்டு உன்னை ஒண்டிக் கட்டையாக்கி விட்டுப் போய் விடுவார்கள். ஆறுதல்தந்து ஆதரிப்பதுதான் அறிவுடைய ஆன்றோர் தம் செய்கை; கடன்; உய்கை; எல்லாம்."

"சுட்டாலும் பால் சுவை குன்றாது; சங்கு சுட்டாலும் வெண்மைதரும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. வயிறு சுட்டாலும் தாம் கெட்டுவிட்ட நிலையைப் பறை எடுத்து அறைந்து கொண்டிருக்க மாட்டார்கள். கண்டவரிடம் உன் கடுமையை எடுத்துக் கூறினால் அவர்கள்