பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33


உன்னை விடுவிக்கவா போகிறார்கள்? கீழோரிடம் எதையும் சொல்லி நீ தாழ்ந்து போகாதே. யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியாது ; உன் துயர் தீர்ப்பவர் ஒரு சிலரை நீ சந்திக்கக் கூடும். அவர்கள் செவிசாய்த்துத்துக் கேட்பார்கள்; வழிகாட்டி வகைப் படுத்துவார்கள்; ஒளி கூட்டி உன்னை உயர்த்துவார்கள். தக்கவர்களிடம் சொல்லிக்கொள்; தகாதவரிடம் விலகிக்கொள்; அவர்கள் ஆற்றப்போவதும் இல்லை ; தீர்க்கப்போவதும் இல்லை ; எதற்காக எடுத்துக் கூறுகிறாய்? விடு; விடு; விடு.

"இன்பம் அது ஒரு போதை; அதன் வேட்கை தீர்க்க இயலாது ; தொடர்ந்து அதன் பின் சென்றுகொண்டு இருக்கிறாய்; நிழலைத் தேடுகிறாய்; அது நீண்டு கொண் டே போகிறது. நிழலின் நிஜம் இருட்டுதான். அதில் இருக்கும்வரை அது குருட்டுத்தனம். வெளிச்சத்திற்கு வா; பழி தரும் செயல்களைச் செய்து இன்பத்துக்கு வழி தேடாதே. போதை மருந்து இன்பம் தரும்; ஆனால் அது போதமன்று; ஏனைய இன்பங்களும் மயக்கம்; அதில் ஈடு படத் தயக்கம் காட்டு ; அதுவே உனக்குப் புகழ் தரும் "

"ஏன் வால் அறுத்துக்கொண்டாய்?" என்று கேட்டால் "வைகுந்தம் பார்க்க முடிகிறது' என்கிறது குள்ள நரி. தான் கெட்டது; மற்றவர்களையும் கெடுக்கிறது. இது நரிக்குணம், மதங் கொண்ட யானை அது கீழ்மையைக் கருதாது. அது கரிக்குணம்.

நல்லோர் தாம் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் கெட்டுப் போக வழி கூறமாட்டார்கள். அழிந்துபோக நினைக்க மாட்டார்கள். பசி என்பதற்காகப் பரதேசிப் பயல்களிடம் கைநீட்ட மாட்டார்கள். கீழ் மக்களை அண்டிப் பாழ்பட்டுப் போகமாட்டார்கள். வானமும்

3