பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


வையகமும் தாமே வந்து காலடியில் விழுவதாயினும் பொய் கலந்த சொல் அவர்கள் பேசமாட்டார்கள்.

9. பிற மாதரைச் சிந்தையாலும் தொடேள்

(பிறர் மனை கயவாமை)

பக்கத்து வீட்டுக்காரி; புதுச்சேலை உடுத்தி அதிகாலையில் நிற்கிறாள்; அவள் அங்கு வருகிறாள் என்பதைத் தெரிகிறான்; பூச்சூடி அன்று மாலை அவன் கண்ணில் படுகிறாள்; 'புதுச்சரக்கு வந்து இறங்கி இருக்கிறது’ என்பது அறிகிறான்.

இவள் யார் ? புதிதாக வந்தவள். அடுத்தவன் மனைவி; சொந்த வீட்டுச் சமையல் சுவைக்காது; அடுத்த வீடு தான் கமழ்க்கும். இவன் மதம் கொண்ட யானை : களிப்பு மிக்கவன்; கரும்பு வயலை மிதித்து அதனை விரும்பி உண்ண நினைக்கிறான். எப்படியோ அந்தப் புதியவள் இவன் வலையில் விழுந்து விட்டாள்.

இனி அடுத்து அவள் கை பிடிப்பதுதான் கருமம்; அத னை விட்டுவிட்டால் தருமம்; கவர்ந்தது அவள் சருமம். ஊசி இடம் கொடுத்தால் நூல் நுழைய வழி கிடைக்கிறது. என்றாலும் பார்த்து நுழைய வேண்டும்; வழி சிறிது ; இருட்டு வேளை? வெளிச்சம்; அவன் கண்கள் கூசுகின்றன.

கதவைத் திறந்து வைத்தாள்; கணவன் வெளியேறிச் சென்றான்; அவன் வருவது எப்பொழுது? அது தெரியாது; அதற்குள் முடித்துக் கொள்ளலாம். ஏன் உடல் நடுங்குகிறது? வைத்தியரிடம் காட்டினால், 'இது மன நடுக்கம்’ என்பான். இத்தனை இடுக்கு வழியே நடுக்கத்தோடு