பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


"நெருப்பினும் தூங்க முடியும்; நிரப்பினுள் கண் படுத்தல் இயலாது" என்பது வள்ளுவர் வாக்கு வறுமை ஒருவனை நடுங்க வைக்கும்; நிம்மதியாக இருக்க விடாது; அதனால் வறியவர் வேறு அரண் இன்றி இவனைச் சரண் அடைகின்றனர். "இங்கே கொட்டியா வைத்திருக்கிறது?" என்று கெட்டியாகக்கூறி மறுத்துவிடுகிறான்; அவர்களைத் துரத்தியும் விடுகிறான். போகின்றவன் மனம் வேகின்றான். "எத்தனை நாளைக்கு உன் வாழ்வு? நீயும் ஒரு நாளைக்கு நடுத்தெருவுக்கு வராமல் இருக்கப் போவதில்லை" என்று சாபம் கொடுக்கிறான்; பாபம் அவன் எரிச்சல் வயிறு.

கொடுத்தால் ஒன்றும் குறைந்துவிடாது; பிறர்க்கும் கொடுத்துத் தானும் உண்டால் செல்வம் செழிக்கும்; அவன் புகழ் கொழிக்கும்; தீமைகள் அழியும், துன்பங்கள் ஒழியும். "நீ இறுகிப் பிடித்தாலும் பணம் உன்னை விட்டுப் போகாமல் இருக்காது; கெட்ட காலம் வந்தால் அஃது உனக்கு விடுதலை தந்து கெடுதலை விளைவிக்கும். ஆக்கமும் அழிவும் வினைப்பகுதியின் செயல்கள்; இல் உண்மை அறிக வறியவர்க்கு ஈக, அதோ நடுத்தெருவுக்கு வந்து நாராயணா" என்று பாராயணம் செய்கிறானே; அவன் எப்படி இவ்வாறு வேறாயினான்? சென்ற பிறவியில் அவன் செய்த கருமம்; செய்யாத தருமம்; இப்பிறவியில் அவனைத் தாக்கி இருக்கின்றன.

பேசும் முன் சிலர் பொடி போட்டால்தான் உற்சாகமாகப் பேசுவார்கள்; நெடியாகத்தான் இருக்கும்; என்றாலும் அது சிலருக்குப் பழக்கம் ஆகிவிட்டது. நீ சோறு தட்டில் இட்டு உண்பதற்கு முன் வெளியே எட்டிப்பார்; காத்திருப்பான் ஒரு பரம ஏழை; அவனுக்கு இம்மி அளவு;