பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


அது கம்மிதான். ஒரு பிடி அரிசி தானம் இடு; சிரமமாகத் தான் இருக்கும் என்றாலும் இதை மறக்காதே."

வறியவன் வந்து நிற்கிறான்; அவனைப் பார்த்துக் கேட்கிறான். "முகவரி கெட்டா இங்கே வந்து நிற்கிறாய்? வள்ளல் பாரி என்றா என் வீட்டு முன்னால் எழுதி ஒட்டி இருக்கிறேன்? 'காரி' என்பவன் யார் தெரியுமா? அவனும் ஒரு உபகாரி, அவர்கள் கொடுத்துக் கெட்டவர்கள்; வள்ளல் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் வறுமைப் பள்ளத்தில் உழல்கிறார்கள். நமக்கு ஏன் வள்ளல் பட்டப் பெயர்? கொடுப்பதும் இல்லை கெடுவதும் இல்லை" என்று கம்பீரமாகப் பேசுகிறான்; இவன் நடு நிலைமை வாதி.

ஒழுங்காகத் தான் வாழ்கிறான்; மாதம் முப்பது; இருபதில் கெடுபிடி; வீட்டில் அடிதடி; இல்லை அரிசி ஒரு படி; என்செய்வது? கேட்டு வாழத்தான் வேண்டும். இரவல்; இரத்தல் என்பதுதான் இரவல் ஆயிற்று. எப்படி யாவது நிரவல் செய்ய இதுதான் வழி; சே! மானம் கெட்ட பிழைப்பு தானம் தராவிட்டாலும் பரவாயில்லை, பிறரைக் கேட்டு வாழ நினையாதே; எந்த இக்கட்டு வந்தாலும் பிறர் படிகட்டு ஏறாதே. மானம் உயிரினும் மதிக்கத் தக்கது. ஒரு முறை கேட்கத் தொடங்கினால் அதன்புறம் நீ மாற மாட்டாய்; தேறமாட்டாய்.

ஊர் நடுவே மரம் பழுத்தது போன்றது என்பர் உபகாரியின் செயல்; குடிநீர் பொதுக் கிணறு, மருந்துச் செடி இவையும் பலருக்கும் பயன்படுகின்றன. இவற்றைப் போன்றவர் உபகாரிகள் என்று உயர்த்திப் பேசினார் வள்ளுவர்; இன்னொரு புது உவமை பலரும் பறித்துச் செல்லும் பனைமரம் ஊர் நடுவே உள்ளது. இஃது உபகாரி உயர்வு; சுடுகாட்டில் காய்க்காத ஆண்பனை அபகாரியின் தாழ்வு. இஃது எப்படி? வள்ளுவர் உவமைக்குத் தோற்கவில்லை நாலடிப் பெருமை,