பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


உபகாரிகள் அவர்கள் வீட்டுக்குக் காவல் இல்லை; துரத்துவதற்கு ஏவல் இல்லை; கத்தி மறைத்துவைத்துச் சுற்றிவரும் காவலாளி இல்லை. அடையா நெடுந் கதவு: அவர்கள் மனம் தூய திறந்தவெளி.

இவர்களுக்கு மாறுபட்டவர்கள் அபகாரிகள்; சுற் றிலும் மதிற்கூவர்கள். ‘நாய் கடிக்கும்’ இது அறிவிப்புப் பலகை. இரும்புக் கதவு; உள்ளே எட்டிப்பார்ப்பதைத் தடுக்க முழுக் கதவடைப்பு; துணிந்து “பிச்சைக்காரர்கள் அனுமதிப்பது இல்லை” என்றும் எழுதியும் வைக்க மாட்டார்கள்; அப்படி எழுதி வைத்தாலும் தொல்லை இல்லை. தம் கஞ்சத்தனத்தை ஒப்புக்கொள்ளவும் மாட்டார்கள். இப்படியும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை பயனற்றது; இயற்கை நியதிக்கு மாறுபட்டது. மனிதன் ஒதுங்கி வாழ இயலாது; வாழக் கூடாது. ஈகை இல்லை என்றால் அந்த வாழ்க்கை சோகைதான்.

மழை உதவுகிறது; அஃது என்ன எதிர்பார்க்கிறது? கைம்மாறு கருதாத செய்கை அதன்பால் உள்ளது. அஃது உலக அபிமானம்; இந்த உலகம் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம். மனிதன் பிறர்க்கு ஈவது தருவது மனித அபிமானம்.

இன்று நாம் உதவினால் மற்றொரு நாள் அவன் திருப்பித் தருவான் என்று நினைப்பது கீழ்பை ; சுருக்கமாகச் சொன்னால் வட்டி வியாபாரம்; கூடுதலாகக் கிடைக்கும் என்று நாடுதல் ஆகும்.