பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


நீ தருவது மிகச் சிறியதாக இருக்கலாம்; இன்று இயன் றது. அதுதான். இதைப்போல் நாளும் செய்துவா! மொத் தத்தில் கணக்குப்போடு. சிறு துளி பெரு வெள்ளம். கேட்ப வனும் வீடு வீடு செல்கிறான். “ஒருபிடி சோறு” என்று தான் கேட்கிறான். அவன் பிச்சைப் பாத்திரம் மணி மேகலையின் அட்சய பாத்திரம் ஆகி விடுகிறது; நிறைந்து விடுகிறது. சிறு பிடிதான்; அது பல படியாகிறது; அது போலநீ இடுவது சிறு துளிதான் தொடர்ந்து அளித்தால் அது பெருவெள்ளம் ஆகிறது

கடிப்பு அடிக்கும் முரசின் துடிப்பு அதன் ஒசை அந்த ஊர் எல்லை வரைமட்டும்தான் எட்டும்; வானத்து இடி அதன் ஒசை மலைகளையும் முட்டும்; நடுங்கச்செய்யும்; அலையோசை போல் அதிரும். நீ கொடுத்து அதனால் எழும் புகழ் ஓசை மூவுலகும் கேட்கும்; எந்த ஒசை மிகவும் பெரிது? யோசித்துப் பேசு, ஈக; அதனால் புகழ் சேர்க்க.

11. ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்

(பழ வினை)

அவரவர் செய்யும் நல்வினைகள் தீவினைகள் எவையும் வீண் போவது இல்லை. “தினை விதைத்தவன் தினை அறுக்கிறான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்” இது பழமொழி. உன் பழைய வினைகள் உன்னைத் தேடி வந்து அடையும் தப்பித்துக் கொள்ள முடியாது, பசுவின் கூட்டத்தில் நல்ல ஒட்ட முடைய கன்றுக் குட்டியை விட் டால் அதன் நாட்டம் அதன் தாய்ப் பசுவை நாடித்தான் செல்லும்; அந்தக் கூட்டத்தில் தன் தாய் யாா என்று கண்டு கொள்ளும்; அதே போல்தான் நீ தோற்றுவித்த பழவினை நீ எங்குச் சென்றாலும் விடாது. சோழ நாட்டை விட்டு