பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

செய்வதற்கு அஞ்சுக; பாவ வேட்டையைச் சுமக்க எண்ணு பவர் இத்தீவினை ஆற்றுவர். கொல்லான் புலால் மறுத்தவனை இந்த உயிர்கள் எல்லாம் தெய்வமாகத் தொழும். அவற்றை வாழவிடுக! அவற்றிற்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு.

அடுத்தது தீயவர் நட்புக்கு அச்சம் காட்டுதல் தேவைப் படுகிறது; பால்போல் வெளுத்து இருந்தான் முன்பு: இப்பொழுது அவன் புளித்துத் தயிராகி விட்டான். காரணம் புரைமோர் பட்டதும் பால்திரிந்து தயிராகி விடுகிறது. நெய் குளிர்ச்சி உடையதுதான். அது சூடான நெருப்பில் பட்டால் அதுவும் சூடு ஆகிறது; தொட முடிவது இல்லை. நல்லவர் கெட்டவர்களோடு சேரும் போது அவர் புளித்த தயிராகவும், சுட்ட நெய்யாகவும் மாறிவிடுகின்றனர். இதை வைத்து அவர்கள் இன்னார் என்று குறிப்பிடப்படுகின்றனர். நிலத்தியல்பால் நீர் திரிகிறது. தீயவர்களோடு நல்லவர்கள் சேர்ந்தால் நல்லவர்களும் தீயவர் ஆகிவிடுகின்றனர்.

'சேரிடமறிந்து சேர்' என்பது பழமொழி; பெருமை உடையவர்களுடன் சேர்வது பெருமை தரும்; அஃது அவனை உயர்த்தும்; வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்; ஒளி பெற்றுத் திகழ்வான்; அந்த நட்பு வளர்பிறை போன்றது; தீயவரோடு நட்புத் தேய்பிறை போன்றது! 'வரவர மாமியார் கழுதைபோல் ஆவாள்' இது பழமொழி. நட்பும் அத்தகையது; அது திருப்பி எட்டி உதைத்தாலும் வியப்பதற்கு இல்லை.

யாரையும் முழுவதும் நம்புவதற்கு இல்லை ; விழிப்பாக இருக்கவேண்டி இருக்கிறது ? நல்லவர்களைத் தேடு-