பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

போகும். உன் கைவசம் உள்ள கத்தியே பகைவர் கைக்குக் கூர் வாள் ஆகிவிடும். அதை வைத்து உன்னைக் குத்த வாய்ப்பை நீயே ஏற்படுத்தித் தருகிறாய். அற்பர்கள் உறவு கைக் கத்தி போன்றது. அவர்களை விட்டு விலகு; உனக்கு அபாயம் நேராது.

"என்னப்பா இளைத்திருகிறாய்?" என்றால் அவன் என்ன சொல்கிறான். சுமக்க முடியாத குடும்பச் சுமை; மனைவி மக்கள் மேல் பாசம், அவள் கேட்ட வரம் தந்து ஆக வேண்டும் மகன் கண்ணில் பட்ட பொருள் வாங்கித் தர வேண்டும். அவர்கள் வசதிக்கு இவன் வணக்கம் செலுத்துகிறான். விட்டு விடுதலையாகி உயிர்க்கு ஆக்கம் தேடுக; பற்றுகள் நீங்குக; அளவுக்கு மீறிய பாசம் உன் உயிர்க்கு நாசம், பாசம் என்றாலே கயிறு: அஃது எப்படியும் செல்லாமல் இழுத்துப் பிடிக்கும். உன் கழுத்துக்குக் சுருக்கு அதனால் அதை முற்றிலும் விலக்கு, பாசமுள்ள மாந்தர்கள் மிகுதி, அவையும் உனக்குக் கெடுதி, இதுவும் தீவினை என்று அஞ்சுக.

பொருட்பால்

14. கல்வி கரை இல

(கல்வி)

ல்வி என்பது யாது? நடுவு நிலைமை கெடாமல் ஒழுகும் நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது; அதுதான் கல்வி; மகளிர் தலைவாரிப் பூச்சூடி புனைந்துகொள்வதும்; விலை மிக்க பல நிறத்துக் கரை போட்ட சேலை உடுத்திக் கொள்வதும், ஆடவர் நெஞ்சம் கவர முகத்துக்கு மஞ்சள் பூசிக் கொள்வதும் அழகு என்று பேசலாம்; அவை புறத்துக்கு அழகு செய்வன; ஆடை அணிகள் உள்ள அழகைக் கூட்டு-