பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

மே யன்றிப் புது அழகை ஊட்டாது; கல்வி அக அழகைக் தோற்றுவிக்கும். அறிவு ஒளிவிட, நீதி நிலை மிக, நடுவு நிலை பெருக, அவர்கள் நல்லவர்கள் என்று நாலு பேர் நவிலக் கல்வி அழகே அழகு.

இந்த உலகத்து வாழ்வுக்குக் கல்வி கண் போன்றது; எதையும் சாதிக்கும் அரிய கருவியாகும்; இருட்டைப் போக்கும்; ஒளியாக்கும்; எல்லா நன்மைகளையும் தரும்; ஈயக் குறையாது; அதைப் பிறர்க்குக் கற்பிக்க அது மேலும் பெருகுமே தவிரச் சிறுகாது; பிறருக்குச் சொல்லும் போது அவர்கள் எழுப்பும் ஐயம்; அதை மையமாகக் கொண்டு எழும் வினாக்கள்; அவற்றிற்குக் காணும் விடைகள்; அவன் மறுத்துச் சொல்லும் தடைகள் இவை அனைத்தும் உள்ளொளி பெருக்கி உயர்வு அளிக்கும். உன்னையே நீ அறியச் செய்யும். இதைத்தான் ஞான நன்னெறி என்பர்; கல்வி உன்னை மெய்ஞ் ஞானியாக ஆக்கும்; கற்ற கல்விக்குக் கேடு இல்லை. என்றும் நீ இதை மறக்க முடியாது. 'பாடை ஏறினாலும் ஏடு அதைக் கைவிடக்கூடாது' என்பர் 'பாடை' என்பது மொழி: மொழி நன்கு கற்றுக்கொண்டாலும் கல்வி கற்பதினின்று விட்டு விலகக் கூடாது என்பதே இதன் கருத்தாகும். கல்வியில் ஆர்வலர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவர்கள் ஏட்டைக் கைவிடுவது இல்லை; கல்விதான் துயர் தீர்க்கும் மருந்து என்று கொள்வர். கல்வியால் விஞ்ஞானம் பெருகுகிறது; அதனால் புது இயந்திரக் கருவிகள் பெருகுகின்றன. அரிய படைப்புகள் உலகத்தில் மிகுந்த வாழ்வுக்கு வளம் தேடித் தருகின்றன.

களர் நிலத்தில் உப்பு விளைகிறது; அது பிறக்கும் இடம் மட்டமானதுதான்; காலடி எடுத்து வைக்கவும் பின் வாங்குவர்; உப்பளம்; அங்கே மீன் உணங்கல் நாற்றம் வீசும்; கடற்கரை உடற்கு ஒவ்வாது என்றும் கூறுவர், என்-