பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

றாலும் அந்த உப்பு இல்லை என்றால் எந்தப் பண்டம் எடுபடும்? "உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே" என்பர்; நல்ல விலை கொடுத்து இந்த உப்பை வாங்குவர்; களர்நிலம் என்று யாராவது களைவார்களா?

பிறக்கும் இடம் எதுவாயினும் அது சிறக்கும் வகையே மதிக்கப்படும்; சாதிகள் இந்த நாட்டில் நீதிகளைக் கெடுத்துவிட்டன. தாழ்ந்தவன் என்பவன் உழைப்பாளி: உயர்ந்தவன் என்பவன் நூலாளி: படிப்பாளி, சாதிபேதம் என்பதே இந்தப் படிப்பால்தான் உண்டாகி விட்டது.

ஒரு சிலர் மட்டும் படித்து இனம் இனமாக முன்னேறி விட்டனர். அவர்களைக் கோயில் குருக்கள் என்றும், கணக்குப் பிள்ளைகள் என்றும், கல்வி ஆசான்கள் என்றும், கவிஞர்கள் என்றும். இந்தப் புவிஞர்கள் வேறுபடுத்தினர். இன்று உள்ள பிரச்சனை கீழ் மட்டத்து மக்கள் கல்வி கற்கவேண்டும்; அவர்கள் உயர்வதற்கு அதுதான் வழி. கல்விச்செல்வம் எல்லா இனத்தவரும் அடைய முடியும்; அதனால் அவர்கள் உயர்வு பெறுவர். சாதிபேதமும் சமூக அநீதிகளும் மறையக் கல்வி வாய்ப்பு அனைவர்க்கும் தரப் படவேண்டும். கல்வி கற்றவன் எந்தச் சாதியாயினும் அவனைச் சமூகம் வரவேற்கிறது; பாராட்டுகிறது, உயர்த்துகிறது.

சொத்து வைக்க எண்ணுகிறாய்; லட்சங்கள் சேர்த்து வைக்கிறாய். அடுத்த தலைமுறை; அதுதானும் அழிகிறது; உடையவனையும் அழிக்கிறது பொருள் அவனைக் கெடுக்கிறது; செல்வச் செருக்கால் அவன் கல்விப் பெருக்கைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை. அறிவு குறைந்தால் ஏனைய நிறைவுகள் அமைவது இல்லை. இவனை விடக்-