பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் உரைநடை ஆற்றல் மிக்கது. ஓசை நயமும் கவிச் சுவையும் கொண்டது. வாசகர்களை ஈர்க்கும் இயல்பினது. அதுவே ஒர் இலக்கியம் ஆகிறது. நாலடியார் செய்யுள்கள் 400. அவை அச்சில் இடம் பெற்றால் 60 பக்க அளவில் அடங்கும்; இந்நூல் 184 பக்கம் கொண்டுள்ளது என்றால் உரைநாட விரிவு பெறுவது இயல்பு: மற்றும் விளக்கம் பெறுகிறது. மூல நூல் இன்றிச் செய்திகளை மட்டும் அறிய உதவுகிறது. நூலின் உவமைகளோடு இந்நூல் புதிய உவமைகளையும், சிறு நிகழ்ச்சிச் செய்திகளையும் சிறுகதைகளையும், பெற்று விரிவு பெற்றுள்ளது. அதனால் இலக்கியத்தரம் பெறுகிறது.

ஒரு நாவல் படிப்பது போன்ற அமைப்பைத் தர முடிந்தது. தலைப்புகள் நூல் பழைய தலைப்புகளோடு புதிய தலைப்புகள் நூலுக்குக் கவர்ச்சியைத் தருகின்றன. ‘தூயது அன்மை’ என்பது நூல்தலைப்பு. இதற்கு எளிய நடையில் தரப்பட்ட தலைப்பு. ‘இவளா அழகி?யோசித்துக் கூறு’ என்பதாகும். செய்யுள் அடிகளும் வழக்காற்றுச் சொற்களும் தலைப்பாகத் தரப்பட்டுள்ளன.

தொடர்ந்து சில நூல்கள் எழுதிவருகிறேன். கம்பராமாயணம், மாபாரதம், சீவகசிந்தாமணி, திருக்குறள் செய்திகள் இவற்றோடு இந்நூல் சேர்கிறது. அரிய எழுத்துப் பணி செய்த மனநிறைவோடு இந்நூலை வெளியிடுகின்றேன்.

இதற்கு அணிந்துரை தருவது என்றால் அவர்கள் இவற்றோடு இதில் உள்ள நயங்களை எடுத்துக்காட்டக் கூடும். அங்கதம் எழுத்துக்குத் துடிப்பைத் தருவது ஆகும். பிறர் மனம் நோகாமல் அதே சமயம் குறைகளைச் சுட்டிக் காட்டுவது அங்கதம் ஆகும்.