பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சேர்த்துக் கூட்டிப் பேசுகிறான். நமக்கு நன்மை செய்வது போல் காட்டி அவன் நம் நண்பர்களைப் பிரித்து வைக்க முற்படுவான். அப்பொழுதும் தலை அசைக்கலாம். ஆனால் நிலைகெடக் கூடாது; ஒளிவிடும் விளக்குப் போல் தம் நிலைமாறாமல் அவன் கூறுவதை எடுத்துக்கொள்ளாமல் அவனை அனுப்பி விடுவதே தக்கது ஆகும். யார் எது சொன்னாலும் சீர்தூக்கி ஆராய்வது பெருமை தரும்.

உண்பதற்கு முன் அவர்கள் கண் நான்கு பக்கம் பார்க்கவேண்டும். முதற்பிடியை மற்றவர்க்கு என்று எடுத்து வைத்துவிட்டு மற்றபடி உண்ணத் தொடங்க வேண்டும். பிறர் பசித்திருக்கத் தான் உண்பவன் நற்கதியைச் சாரான்; அவன் மனம் அழுக்குப் படிந்ததாக விளங்கும். மனம் மாசு பெற்று மங்கி விடுவான்.

20. உழைப்பே உயர்வு தரும்

(தாளாண்மை)

ஏரியில் நீர்வளம் இருப்பதால் அடுத்த கழனிகளில் பயிர்கள் செழித்து வளர்கின்றன. பயிர்கள் பச்சைப் பசேல் என்று இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஏரியில் நீர் நிறைந்திருக்கிறது என்பதாகும். அவை செழித்து வளர்வதற்கு நீர் கொழித்துப் பாய்கிறது. சுற்றமும், உறவினரும், மக்களும் மனைவியும் சுகமாக இருக்கின்றனர் என்றால் அக்குடும்பத் தலைவன் உழைப்பதால்தான். தளராத உழைப்பு மற்றவர்கள் பிழைப்புக்குக் காரணம் ஆகிறது. நாட்டியப் பெண் பாட்டியலுக்கு ஏற்ப ஆடுகிறாள்; அவள் கண்கள் வாள் போல் சுழன்று சுறுசுறுப்பைக் காட்டுகிறது. அவள்