பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 துன்பவியல் 29, இன்மையின்(வறுமையின்) கொடுமை காவி படிந்த உடையை இடுப்பிலே உடுத்து வாழ்ந் தாலும், கையில் பத்தோ - எட்டோ பொருள் உடைத்தா யிருப்பது பலர் நடுவே பெருமையடையச் செய்யும். பொருத்தமான உயர்குடியில் பிறந்திருப்பினும், ஒரு பொருளும் இல்லாத ஏழையர் செத்த பிணத்தினும் தாழ்ந்த வராய்க் கருதப்படுவர். . . . . 281 நீரைக்காட்டிலும் நெய் நுட்பமானது என்று சொல்வர். நெய்யைவிடபுகை நுட்பமானது என்பதை எவரும் அறிவர். நினைத்துப் பார்க்கின், வறுமைத் துன்பம் உடையவன் புகையும் புக முடியாத வாயிலுக்குள்ளும் நுழைந்து புகுந்து விடுவான், . 282 தினேப் புனத்தில் கல்லால் கிளி ஒட்டும் காட்டு நாடனே! கற்கள் ஓங்கி உயர்ந்துள்ள மலேச்சாரலில் காந்தள் பூ மலராவிடின், சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் செல்லமாட்டா. அதுபோல, பொருள் இல்லார்க்கு உற வினரும் இலராவர். 283 உடம்பு அழிந்தபோது அதனைத் தின் னக் கூடும் காகங்கள் போல, செல்வம் உண்டானபோது, அடிமையாக ஆயிரக் கணக்கானவர் வந்து சேர்வர். தேனுக்குத் திரியும் வண்டுபோல் வறுமையுற்று உணவுக்குத் தி ரி ந் து கொண்டிருக்கும் கால த் தி ல், கேடு இன்றி நலமா யிருக்கிறீரோ என்று வினவுபவர் இவ்வுலகில் ஒருவரும் இலர். - 284 ஒலிக்கும் அருவி கல்மேல் விழுந்து கறையைக் கழுவுகிற. கூட்டமான குன்றுகள் சூழ்ந்த நல்ல நாடனே! வறுமை யால் கவ்வப்பட்டவர்க்கு, பிறந்த குலப்பெருமை போகும் பெரிய ஆண்மையும் அழியும்; தமது சிறந்த'கல்வியுங்கூட குன்றும். 28: