பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 துன்பவியல் வயிற்றுள் மிகுகின்ற பசியினல் தன்னிடம் விரும்பி வந்தவர்க்கு, உள்ளுரில் வாழ்ந்தும் ஒன்றும் கொடுக்காத கருமி, உள்ளுரிலே இருந்து உயிர் வாழ்க்கையை வீணுய்க் கழிக்காமல், தான் வெளியூருக்கு அல்லது விண்ணுலகிற்கு விருந்தினய்ைப் போய்விடுதலே நல்லது. 286 கூர்மையுடைய முல்லை மொக்கைத் தோற்கடிக்கும் பற்களை யுடையவளே! வறுமையென்னும் துன்பம் சேரப் பெற்றவர்கள், தம் உயர் பண்பையே யன்றி, மிகவும் எழுச்சியுற்றிருந்த தம் அறிவுக் கூர்மையையும் இன்னும் எல்லாவற்றையும் ஒருசேர இழந்துவிடுவர். 287 வறுமையால் இடுக்குற்று ஒன்று கேட்டவர்க்குக் கொடுக்கமுடியாமல் முட்டுப்பாடடைந்து வருந்தி முயன்று உள்ளுரிலே வாழ்வதனினும், நெடுந்தொலைவிலுள்ள வேற்றுர் சென்று, ஆங்கு வரிசையாய் உள்ள வீடுகளில் கையேந்திக் காலங்கழிக்கும் மாண்பு கெட்ட வழியில் வாழ்வதே நல்லது. - 288 செல்வம் சென்றழிந்துவிடின், முன்பு கடகம் அணிந் திருந்த தம் கைகளால் கிளைகளை வ ளை த் து வாங்கி இலைகளைப் பறித்துக்கொண்டு போய்ச்சமைத்து, குடைவாக வளேக்கப்பட்ட பனையோலேப் பட்டையையே பாண்டமாகக் கொண்டு அதில் உப்பில்லாமல் வெந்த இலக்கறியை இட்டுத் தின்று உள்ளம் அழிந்து வாழ்க்கை P–ಣ್ಣ நீர் நிறைந்து அருவி தாழ்ந்து பாயும் உயர் ந் த சிறப்புடைய குளிர்ந்த நல்ல மலைநாடனே! ஆரவாரிக்கின்ற -புள்ளிகள் பொருந்திய-அழ்கு விளங்கும் வண்டினங்கள், பூத்து உதிர்ந்துபோன வெற்றுக் கிளைகளிடம் செல்ல மாட்டா. அதுபோல, வாழ்வு அற்றவர்க்கும் உறவினர் இலர். . 290