பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 பொதுவியல் பொது இயல் 32. அவையை அறிந்து அதற்கேற்ப ஒழுகல் மெய்ய றிவுடையோரது அவையில் ஒத்துப் பழகும் நல் வழியை விட்டு, அங்கே அறியாமைக்கு உரிய ஒரு செய்தியைக் கூறி, அதுவே சரியென்று மிகவும் பரப்புதல் செய்து, கீழான அறிவுடன் நடந்துகொள்ளும் கரிய உள்ள முடையவரின் முன்னே, சொல்லத்தக்க நற்கருத்தை நல்லோர் சொல்லாது விடுவாராக! 'நாவால் பாடம் பண்ணியதை ஒப்பித்து, பாடலின் நயம் உணர்ந்தவர்போல் மிகவும் காட்டிக்கொள்ளும் திய பொய்ப் புலவனை, நிறைந்த அறிவுடையவர் அடையார். ஏனெனில், அந்தத் தீய புலவன், அவையிலே, பெருமை குன்றும்படி இவரது குடிப்பிறப்பைப் பழித்துப்பேசுவான்; அல்லாமலும், தோள் தட்டிக்கொண்டு அடிபிடி மல்லுக்கு எழுவான். 312 வீணுகப் பல பேகம் மாந்தர் பலர், சொல்லையே தார்க் குச்சியாகக் கொண்டு பிறரைக் குத்தி, தினவு கொண் டெழுந்து பேச விரும்புவர்; சான்ருேரது கல்வியறிவின் வலிழையைத் தாம் அறியார்; தாம் கற்றவற்றையும் பிறர் நெஞ்சில் பதியும்படி எடுத்துச் சொல்லும் வழியறியார்; தமது தோல்வியையும் அறியமாட்டார். 313 அறிவிலி தான் சிறப்பாகக் கற்றது ஒன்றும் இன்றி, ஆசிரியர் சொல்லிய பாடத்தின் வாயிலாக ஏதேனும் ஒரு செய்யுளை மனப்பாடம் செய்துவைத்திருப்பான். மேலும், அப்பாடலை, நல்லவர் அவையிடையே புகுந்து நாணமின்றி ஒப்பித்துத் தன் மட்ட அறிவைக் காட்டிவிடுவான். 314 பிறரை வெல்வது காரணமாக, விலங்குபோன்ற தன்மை யுடன், உண்மைப் பொருள் உணராதவராய், சினந்து கறுவி எழுந்து கொதிக்கும் தியவரோடு சேர்ந்து தமது பேச்சுத் திறனேக் காட்ட முயல்பவர், தம் கைக்குள் சுரை விதையைப் போன்ற தம் பற்களைக் காண்பர். (அதாவது பல் உதிர்க்கப் படும்)