பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பகையியல் முதுமை மேலிட்டு வருவதற்கு முன்பே நல்ல அறச் செயலே ஊக்கத்துடன் தொடங்கி அதனிடம் முயற்சி கொள்ளாதவன், பின் முதுமையில் தன் வீட்டிலேயே ஒதுக்கப்பட்டு, வெளியிலேயே இரு-எங்கேயாவது போ' என்னும் இனிமையற்ற சொற்களை வேலைக்காரியாலும் இகழ்ந்து சொல்லப்படுவான். 326 அற்ப அறிவினர் தாமும் செல்வத்தை நுகரமாட்டார்; தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்யார்; பாதுகாப்பு பொருந்திய நல்லறவழியையும் பின்பற்ருர்; தாம் செல் வத்தில் மயங்கித் துங்கி வீணே வாழ்நாளைக் கழிப்பர். 327 மறுவுலகம்,செல்லும்போது தமக்கு வேண்டிய அறமாகிய சோற்றை, இளமையிலேயே, இறுக இறுகத் தோளிலே மாட்டிச்செல்லும் கட்டுசோற்றைப் போல் உண்டாக்கி வைத்துக் கொள்ளாதவராய், பொருளே இறுக்கி இறுக்கி வைத்து, பிறகு அறம் செய்வோம் என்று தள்ளிப்போடும் அறிவிலிகள், (இறக்கும்போது பேசமுடியாமையால்) கையால் குறிப்புக்காட்டும் பொன்னுருண்டையும், புளித்த விளாங்காய் கேட்பதாகச் சுற்றத்தாரால் கருதப்படும். 328 வறுமையுற்றபோதும் பெரிய நோய் கொண்டபோதும் மறுவுலகைப் பற்றி எண்ணும் மனத்தை உடையவரா யிருந்து, அவை நீங்கி ஆறுதல் பெற்ற காலத்தில், மறு வுலகைப் பற்றிக் கடுகு அளவாயினும் அற்ப அறிவினர் எண்ணுர். - 329 அந்தோ! அளவற்ற அன்பிற்கு உரிய-தம் அரிய உயிர்போன்ற நெருங்கிய உறவினரைக் கொண்டுபோக முயலும் எமனைப்பற்றி அறிந்தும், பெறுதற்கரிய இந்த மனித உடலைப் பெற்றிருந்தும் அறம் செய்ய எண்ணுராய், விணே தம் வாழ்நாளைக் கழிப்பர் சிலர். என்னே கொடுமை இது ! - 330