பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 அறம் 3. ஈதல் வசதி இல்லாவிடத்தும், தம்மால் இயன்ற அளவு, வசதி யுள்ள இடம்போல் மிகவும்மகிழ்ந்து அமைதியாய்க் கொடை புரியும் பண்புள்ள மாந்தர்க்கு, அங்கே வீடுபேற்றுக் - கதவுகள் அடைக்கப்படாவாம். 91 முடிவு நாளும், வெறுக்கத்தக்க முதுமையும் முதலிலேயே நிலையாயுள்ளன; மேலும், பெரும்ை கெடுக்கும் பிணிகளும் உள்ளன. எனவே, விணே பொருள்தேடி அலையாதிர்கள்! இருக்கும்பொருளையும் இறுக்கிவிடாதிர்கள்! கையில் பொருள் இருக்கும்போதே பலர்க்கும் பகுத்தளித்து உண்ணுங்கள்! ஒன்றையும் ஒளிக்காதீர்கள்! 22 வறுமையால் நடுங்கித் தம்ம்ை யடைந்த எளியோரது துன்பத்தைப் போக்காத கருமிகள், அவர்க்கும் அளித்துத் தாமும் நுகரினும், செல்வம் சேருங்காலத்தில் சேர்ந்தே திரும் குறையாது. நல்வினை யற்றபோதோ, இடுக்கி இறுகப் பற்றினும் செல்வம் நில்லாமல் விட்டு நீங்கும். 23 உம் இல்லம் வருவோர்க்கு நாடோறும் இம்மி அரிசி அள வாயினும் இயன்றது ஈந்து உண்ணுங்கள். இல்லையேல், ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில், சமைக்காத அடுப்புடைய ஏழையர், கொடாத கருமிகள் என்று உம்மை இழித்து உரைப்பர். - 24 மறுமைப் பயனையும் இம்மைப் பயனையும் ஆராய்ந்து இயன்றவற்றை ஈதலே, ஒருவருக்கு நன்மையுறும் வழி யாகும். ஏழமையால் ஈதல் இயலாது போயினும், இன்னுெரு வரிடம் இரவாதிருத்தல் ஈதலினும் இருமடங்கு சிற்ந்தது. 25