பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இல்லறவியல் 4. பழைய ஊழ்வினை ஒர் இளங்கன்றினைப் பல பசுக்களின் நடுவே செலுத்தி விட்டாலும், அது தன் தாய்ப் பசுவைத் தேடிக் கண்டு கொள்வதில் வல்லமையுடையதாம்; முற்பிறவியில் செய்த பழைய ஊழ்வினையும், தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடியடைவதில் அக்கன்று போன்றதேயாம். 31 உருவழகும் இளமையும் நல்ல பொருளும் மிடுக்கும் ஒரு நிலையாய் நிலைக்காததை அறிந்தும், ஒரு வகையிலும் ஒரு நன்மையும் செய்யாதவனது வாழ்வு, உடம்பைப்பெற்று நின்றும் ஒரு பயனும் இன்றி வீணே விழச்செய்த அளவின தேயாம். - 32 விளாம்பழத்தை உருண்டை யாக்கினவர் எவரும் இலர்; களப் பழத்தைக் கறுப்பாக்கினவரும் எவரும் இலர்; அவை இயற்கையாய் அமைந்துள்ளன. உலகில் வளம்பெற விரும் பாதர் எவரும் இல்லையெனினும், அவரவர் ஆற்றிய வினை கட்கேற்ப இன்பங்களும் இயற்கையாய் அளவுபடுத்தப் பட்டுள்ளன. 33 மழை வறண்டால் பெய்விப்பாரும் இல்லை. மழை மிகுந்தர்ல் அதனைக் குறைப்பாரும் இல்லை. அவ்வாறே, ஊழ்வினையால் வரக்கூடியவற்றைத் தடுத்தல் எந்த வலி யார்க்கும் இயலாது; பெற விரும்புகிறவற்றைத் தாமாகப் பெறுவதென்பதும் அதுபோன்றே இயலாததாம். 34 பனையளவு பெருமைக்குரிய சிலர், தினை அளவினாய்த் தம்.ஒளி உள்ளடங்கி நாளும் பெருமை யிழந்து வாழ்கின்ற னரே; நினைத்துப் பார்க்கின், அதற்குரிய காரணம், முன் செய்த வினைப்பயனே யல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? 5