பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 துறவறவியல் எமன் இப்பொழுது வருவானே-அப்பொழுது வருவானே. எப்பொழுது வருவானே என்றெல்லாம் எண்ணுமல், அவன் நம் பின்னலேயே மறைந்து நின்றுகொண்டிருக்கிருன் என் பதாக எண்ணி, தி வினைகளை நீக்குக ! முடிந்தவரையும் உயர்ந்தோர் வகுத்துள்ள அறங்களைச் செய்துவருக. 96 மக்கட் பிறவியால் ஆகக்கூடிய பெரும்பயனை ஆராயின், எவ்வளவோ மிகப் பல பயன்கள் உண்டாவதால், தடித்த உடம்புக்கு வேண்டிய உதவிகளைமட்டும் செய்துகொண் டிராமல், மேலுலகம் சென்று துய்ப்பதற்காக நல்லறங்கள் செய்யவேண்டும். 97 கிள்ளி யெறியும் அளவினதான ஒரு சிறிய ஆலம் விதை பெரிய மரமாய் விரிந்து மிகவும் பரந்த நிழலைப் பயப்பது போல, அறத்தின் பயனும் தான் சிறியதாயிருப்பினும் தகுந்தவர் கையில் செய்யப்பட்டால், வானம் சிறிதாக அதனைப் போர்த்தும் அளவு தான் பெரிதாகும். 98 நாடோறும் நாளானது தம் வாழ்நாளில் கைவைக்கிற தாக அந்நாளைக் கணக்கிட்டு உணராதவர், நாடோறும் நாள் வந்து கழிதலைப் பார்த்தும், தம் வயது குறைவதான அந்நுட்பம் உணராதவராய், நாடோறும் நாளே இன்பமா யிருக்கிறது என்றெண்ணி மகிழ்வர். ஈனத் தொழில் செய்து உணவு ஊட்டியபோதும் இந்த உடம்பு அழியா உறுதி பெற்றுப் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்து நிலைத்து நிற்கும் என்ருல், மானம்’ என்னும் பெறுதற்கரிய அணிகலனை இழந்து, இரத்தல் (யாசித்தல்) என்னும் ஈனத்தனமான இழிசெயல் செய்தாவது யான் உயிர் வாழ்வேன். ஆனல் அது நடவாதே ! 100