பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அரசியல் உயர்ந்த பல மணிகள் முத்துக்களோடு ஒளி வீசும். ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்கரை நாடன்ே ! நல்லின நட்பு, இன்சொல் பேசல், இரப்பார்க்கு ஒன்று ஈதல், மேலும் மற்ற மனத்துய்மைமுதலிய நற்பண்புகள் யாவும் நற்குடிப் பிறப்பாளரிடம் இருக்கும். - 146 பெரிய மாளிகை ஒரு பக்கம் வேலைப்பாடு அழிந்திருந் தாலும், மற்ருெருபக்கம் செல்நிறைந்து அரித்திருந்தாலும், இன்னெரு பக்கமாவது மழை பெய்யாத நல்ல இடத்தை உடைத்தா யிருக்கும். அதுபோல, நற்குடிப் பிறந்தோர், வறுமைத் துன்பத்தால் வருந்துங் காலத்தும், செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்துகொண்டே யிருப்பர். - 147 ஒரு பக்கம் பாம்பு (கிரகணம்) பற்றிக்கொண்டாலும், மற்ருெரு பக்கத்தால், அழகிய இடத்தையுடைய பெரிய நிலவுலகை வெளிச்சத்தால் விளங்கச்செய்யும் நிலாவைப் போல, நற்குடியாளர், தம்மை வறுமை நன்கு பற்றி நிற்பினும், உலகிற்கு உதவுவதில் தளரார். 148 மான் உடம்பின்மேல் சேணம் போட்டுக் கொண்டாலும், பாய்ந்தோடும் குதிரைபோல் போர்முகத்தில் பகையை எதிர்த்தல் இயலாது; அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் செய்ய முடியாதபோதும் எப்படியாவது முயன்று செய்யும் நற்செயல்களை, தாழ்ந்தவர்கள் செய்ய முடிந்த போதும் செய்யமாட்டார்கள். - 149 நீர் அற்றபோதும் அகழ்ந்த ஆற்றைத் தோண்டினல் விரைந்து தெள்ளத் தெளிந்த நீர் தோன்றி உதவும். உயர் குடியினரும் தம்மிடம் யாதொன்றும் இல்லாத போதும், வசதியற்றுத் தம்மை அண்டிய எளியார்க்கு, தளர்ந்த விடத்து உதவும் ஊன்றுகோல்போல் உதவுவர். 150