பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 அரசியல் 16. மேலான பண்பாளரின் மேன்மை அழகிய இடத்தையுடைய விண்ணிலே அகன்ற நில வொளியைவீசும் வெண்ணிலாவும் மேன்மக்களும் தம்முள் நிகராவர்; ஆனல், வெண்ணிலாவானது தன்னிடமுள்ள கறுப்புக் களங்கத்தைத் தாங்கிக்கொண்டுள்ளது. மேலோரோ, ஒரு களங்கம் உற்ருல் அதைத் தாங்கமுடியாத வராய் மயங்கி அழிவர். つ . 151 கருதியது கைகூடினும்-சரி கைகூடாவிடினும் சரி-பழி வராமல் பார்த்துக்கொள்வர் பெரியோர். விரைந்து பாய்ந்து நரியின் மார்பைப் பிளந்த அம்பைக்காட்டிலும், அரியின் (சிங்கத்தின்) மேல் வைத்த குறிதவறிய அம்பு தாழ்ந்ததா στώύτουτ ? - 152 உயர்ந்தோர் நரம்பு தெரிய மெலிந்து ஏழமையுறினும், தம் வரம்பு கடந்து குற்றமான செயல்புரிந்து முன்னேற முயலார்; தம் அறிவைக் கருவியாகக்கொண்டு, ஊக்கம் என்னும் கயிற்ருல் மனத்தைக் கட்டுப்பாடு செய்து, தம்மிடம் உள்ள அளவிற்குச் செய்யத்தக்க நற்செயல்களைச் செய்வர். 153 நல்ல மலை நாடனே கருங்கல் மலையிலும் ஒருசிலநாள் மக்களின் காலடி பட்டாலேயே தேய்ந்த பாதை உண்டாகி விடும். பெரியவர்கள் செல்லும் வழியிலே ஒருவரை ஒருநாள் கண்ணுல் கண்டாலும், தொன்றுதொட்டுப் பழகிய நட்புபோல் தெரியும்படி மிகவும் விரும்பிக்கட்டுண்டு பழகுவர். 154 எழுத்து (இலக்கணம்) அறியாத-ஒரு கருத்தும் உணர முடியாத வீணர் கூட்டத்திலே கல்லாத போலி யொருவன் பேசவும், தவறி அங்குச் சென்ற நல்லார் அவனது பேச்சால் வருந்திலுைம், கண்டித்தால் அவன் பலர் நடுவே நானுவானே என்று பரிவுகொண்டு இரக்கமுற்று வாளா கேட்டுக்கொண்டிருப்பார். . . 155