பக்கம்:நாலும் இரண்டும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பினும் ೩೧ முடைமை கிருர் முதல் மூன்று குறளிலும் அன்பு தோன்றும் கிலே, அன்புடையார்தம் தன்மை, அதுவே உலக நெறி என்ற உண்மை இவைகளை விளக்கி, பின் அவ்வன்பால் மனிதன் பெறும் பயனே அடுத்த குறளால் சுட்டுகிருர் ஆம் அதுவே 'நண் பென்னும் நாடாச் சிறப்பாகும். இதோ அவர் வாக்கு அன்பினும் ஆர்வமுடைமை அதுஈனும் கண்பென்னும் நாடாச் சிறப்பு' (குறள் 74) இக்குறள் இரு பகுப்பாகக் கொள்ள இடம் தருகின்றது. அன்பிற்கும் நண்புக்கும் இடையில் ஆர்வமுடைமையினே யிடுகிருர் வள்ளுவர். அன்பு தரும் ஆர்வமுடைமையை: அவ்வார்வமுடைமை தரும் நட்பென்று சொல்லப்படுகின்ற ஆராய்த லில்லாத சிறப்பினை' என்று இதற்கு விளக்கம் கூறுவார் மணக்குடவர். "யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாதலின், அதனே காடச் சிறப்பு என்ருர்” என விளக்கம் தருவார் பரிமேலழகர். மனிதன் உலகில் தனக்கு வேண்டியவற்றை பெற்று, மற். ருரோடும் உற்ருரோடும் கலந்து, பெற்றவற்றைப் பகிர்ந்து கொண்டு விருந்து புறந்தோம்பி, சுற்றம் தழுவி, பெரியா ரைத் துணைகொண்டு, ஒப்புர வொழுகி,ஒழுக்கமுடையவனுய். வாழவே பிறந்தவன். இந்தப் பெரு நலன்களேயெல்லாம்: தருவது அன்பு ஒன்றே என்பதனைத்தான் இந்தக் குறளில் வள்ளுவர் சுட்டிக் காட்டுகின்ருர். நண்புக்கும் அன்புக்கும் இடையில் ஆர்வமுடைமையை வைத்து அதன் ஏற்றத்தை மேலும் நன்கு புலப்படுத்துகின்ருர். ஆர்வமுடைமைக்கு விருப்பமுடைமை எனப் பொருள் காட்டுவர் பரிமேலழகர். ஆம்! அன்பு உண்டாயின் அவ்விருப்பம் தானே வந்து: அமையு மாதலான். * , - 17