பக்கம்:நாலும் இரண்டும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் நட்பு என்பதனை ஒன்றுக்குமேற்பட்ட அதிகாரங்களால் பின்னல் விளக்கும் திருவள்ளுவர், இங்கே அன்போடு அதனே இணைத்து, உலக வாழ்வுக்கு அதன் இன்றியமையா .கிலையைச் சுட்டுகின்ருர், உலகில் பிறந்த எவனும் எதையும் வேண்டாது ஒதுக்கி வாழ முடியாது; இயல்பு மன்று. எனவே பலவற்றைப் பெற்று, பலருடன் ஒன்றி வாழ்வதுவே அவன் பிறந்ததன் பயன். இந்தப் பயனுள்ள வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படுவதே நட்பு என்பதாகும். பகைவர், வேண்டாதவர் என்று யாரும் இலராய், எல்லோரும் கட்பாளராக இருக்கும் வகையில் ஒருவன் அனேவரோடும் பழகி, அன்பு காட்டி வாழ்வானுயின் பிறகு அவனுக்கு உலகில் ஆகாதசெயல் இல்லை;அவன் பெற நினைத் தால் பெறமுடியாத பொருள் இல்லை. எனவே அவன் விருப் போடு மகிழ்ந்து வாழ அடிப்படையாக அமைகின்றது நட்பு. ஆம்! அது நாடாச் சிறப்புத்தானே-அனைவராலும் பெறமுடியாச் சிறப்புத்தானே! இந்த நாடாச் சிறப்பாம் நட்பினைத் தருவது 'அன்பு ஒன்றே என வள்ளுவர் விளக்கி, மனிதன் அந்த அன்புடையவனுய் வாழ வேண்டிய வகை .யினை இங்கே வற்புறுத்துகின்ருர் நாம் அன்புடையராக வாழின் யாரும் நட்பின ராகி, காம் வாழ்வாங்கு வாழ இயலும். இந்த உண்மையை விநாயக புராண ஆசிரியர் .நன்கு விளக்குகிருர். அவர் வாய் மொழியினைக் கண்டு அமைவோம்! நொதுமலரும் படர்செய் பகையும் உறவாக்கும் பற்றும் அளிக்கும் - மனைமைந்தர் தொடர்பின் வளர்க்கும் அன்பதல்ை சோர்ந்தும் . அன்பின் வழுவற்க" (அரசி.22) 18