பக்கம்:நாலும் இரண்டும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் அன்பினலே பின் துறக்கத்தைச் சென்றெய்தும் பேரின்பத் தினையும் உடன் காட்டிக் கூறுவர். அனைவர் உரைகளும் அன்பின் வழியாகப் பெறும் இன்ப ஏற்றத்தினேயே குறிக்க அமைகின்றன. எனினும் வள்ளுவர் இந்த வாழ்விலேயேஇந்த உலகிலேயே-வையத்திலேயே-பெறும் இன்பத்தின் சிறப்பினே அன்பின்மேல் ஏற்றிச் சொல்லுகிருர் என்பது பொருந்துவதுதாகும். உலகில் இன்பமாக வாழவிரும்பும் ஒருவர் மற்றவரைத் தழுவிச் செல்லவேண்டும். மற்றவரிடத்து அன்பு காட்டா விடின் உலகில் என்றும் அமைதியோடு வாழமுடியாது. என்பதை வரலாறு காட்டுகிறது. அன்பு என்பது உற்ருர் மாட்டு அன்றி மற்றுள்ளார் மாட்டும் செல்லும் உள்ள நெகிழ்வே என்பதை அதிகார வைப்பான் அறிகிருேம். 'எனவே, நம்மோடு தொடர்பு இல்லாதாரிடத்திலெல்லாம் அன்பு செலுத்தினல் நமக்கு எல்லோரும் உற்றவர் ஆவார் களன்ருே அவ்வாறு உற்றவராயின் அவர்களால் நமக்கு. விளைவது இன்பமே யன்றித் துன்பம் ஏது? எனவே இவ்வுலகில் இன்புற்ருர் சிறப்பு எய்துகிருர்கள் என்ருல் அதற்கு அன்பே அடைப்படை எனக் காட்டுகின்ருர் வள்ளுவர். 'அமர்ந்த' என்பதற்கு இல்லறத்தொடு பொருங் திய என்று பரிமேலழகர் உரை கூறுகின்ருர். இதல்ை அன்பு இல்லறத்துக்கு அமைந்தது எனக் கொள்ளினும் எல்லா உயிர்களுக்கும் இது பொருந்தும் எனக் கொள்ள வேண்டுவதே சிறந்தது. இக்குறள் இல்லற இயலில் வைக்கப் பெறினும் இதல்ை பெறுஞ் சிறப்பினே, வையத்து இன்புற்ருர் எய்தும் சிறப்பு" 20