பக்கம்:நாலும் இரண்டும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புற் றமர்ந்த என்றே வள்ளுவர் காட்டுகிருர். எப்படியாயினும் உலக இன்பத்துக்கும் அதனல் பெறுஞ் சிறப்புக்கும் அடிப்படை அன்பே என்பதை நன்கு விளக்குகிருர் வள்ளுவர் என்பது தெளிவு. வழக்கு என்பதற்கு நெறியின் பயன் என்று கூறுகிருர் அவர். வழக்கு என்பது தொன்றுதொட்டு வரும் நெறிமுறை என அமைகின்றது. அன்பால் பெறும் இவ்வையச் சிறப்பு புதிதாக வந்துவிட்ட ஒன்று அன்று என்பதும், என்று வையம் தோன்றிற்ருே அன்று தொட்டே இவ்வழக்கு உண்டென்றும், என்று உயிரினம் தோன்றிற்ருே அன்று தொட்டே அறிந்தோ அறியாமலோ இந்த அன்பும் அதன் வழியாகப் பெறும் இன்பமும் தோன்றின என்றும் கொள்ளல் வேண்டும். வழக்கு என்ற சொல்லின் பொருள் அப்போதுதான் சிறக்கும். இவ்வாறு உலகம் தோன்றிய நாள்தொட்டு வளர்ந்து வந்த அன்பின் உயர் சிறப்பைத்தான் வள்ளுவர் இந்தக் @ றள்வழியே காட்டுகின்ருர். இந்த அன்புதான் உலகை வாழவைக்கிறது என்பது வள்ளுவர் உள்ளக்கிடக்கை. ஆம்! அந்த அன்பின் அடிப்படையிலே பெறுகின்ற இன்பவழி உயரும் சிறப்பே சிறப்பு என்ற உண்மையை உணர்ந்து, உலகில் இன்பொடு கூடிய அந்தச் சிறப்பினைப் பெறுதற்கு நாம் அன்பினே இடையருது போற்றி ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும். அன்புடையரானல் பிற மக்களுக்கிடை யில் உயரலாம்-இன்புறலாம்-சிறப்பெய்தலாம். உயரினம் -சிறப்பாக அறிவறிந்த மக்களினம்-இந்த அன்பின் வழியால் ஏற்ற முறுவதாக! . 21