பக்கம்:நாலும் இரண்டும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்திற்கே 15-1-73 'அன்பின் வழியது உயிர்கிலே' என்பது வள்ளுவர் வாக்கு. எனவே, உலகில் உயிர் வாழ அன்பு இன்றியமை யாதது. வாழ்விலிருந்து அன்பினே எப்படியும் பிரிக்க முடியாது. சிலரிடம் அன்பு வெளிப்படையாகக் காட்டப் பெறும்; சிலரிடம் மறைமுகமாக அமையும். எப்படியும் அன்பு உலகில் இல்லையானல் வாழ்வு இல்லே-வாழ்வு வறண்ட பாலைவனமாகத்தான் அமையும். இவ்வுலகில் மனிதன் இணைந்து வாழக் கடமைப்பட்ட வகிைன்ருன். அந்த இணைந்த வாழ்வில் அவன் நாள் தொறும் எத்தனையோ மக்களைச் சந்திக்க வேண்டியவன கின்ருன். அப்படிச் சந்திக்கின்ற அனைவரிடத்தும் அவன் அன்பினைச் செலுத்துகிருன் என்ருே அல்லது அத்துணை மக்களும் அவனிடம் அன்புடன் பழகுகிருர்கள் என்ருே சொல்ல முடியாது. சிலருக்குச் சிலர் உற்றவராக இருப்பர்; சிலர் மாறுபட்டவராக இருப்பர்; சிலர் இரண்டுமற்று நொது மலராக இருப்பர். உலகில் இந்த வேறுபாட்டில் உற்றவ ரெல்லாம் அன்பால் பிணிக்கப்பட்டவர் என்றும் மற்றவர் அன்பால் வேறுபட்டவர் என்றும் நாம் நினைக்கிருேம். வள்ளுவர் உயர்ந்த உணர்வும் உள்ளமும் உடையவர் ஆதலின், இந்தக் கருத்திற்கு அப்பால் செனறு வேறுபட்ட வரும் அன்பால் பிணிக்கப் பெறுவர் என்ற உண்மையை உணர்த்துகிருர். நமக்கு வேண்டியவர் என்ருல் நம்மை அறியாமலேயே நாம் அன்பு செலுத்துகிருேம். சிலரிடம் நம் உணர்வு நம்மையும் மீறி அன்பினைப் பொழிகின்றது. அறத்தாறு 22