பக்கம்:நாலும் இரண்டும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்திற்கே கிற்கும் இந்த அன்பு நெறி சிறந்த ஒன்றேயாகும். ஆனல் அந்த அளவில் அன்பு கின்றுவிடுவதன்று. அதன் எல்லை விரிந்த ஒன்று. அறத்தாற்றின் நெறி நின்று அதனை வளர்ப்பதற்காக மட்டுமன்றி, அறத்திற்கு மாறுபட்ட மறத்தின் வழி நின்று, அன்பு, அந்த மறத்தினையும் மாற்றும் திறம் வாய்ந்தது என்பதே வள்ளுவர் கண்ட உண்மை. + அறத்தாற்றில் கிற்கும் உற்றவரிடம் அன்பு செலுத்தப் பெறும் இயல்பும் அதனல் பெறும் சார்பு கிலே முதலியனவும் பயனும் உலகம் அறிந்தனவேயாம். ஆனல் மறத்துக்கும் இந்த அன்பே துணையாவதனே எண்ணிப் பார்க்கவேண்டும். வள்ளுவர்: - "அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்திற்கும் அதே துண" (76) of oly LIT. - - ஒருவன் செய்த பகைமை பற்றி உள்ளத்து மறஉணர்வு நிகழ்ந்துழி, அவனே நட்பாகக் கருதி அவன்மேல் அன்பு செல்ல அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணை யாம் என்பார், மறத்திற்கு மஃதே துணை என்ருர் எனப் பரிமேலழகர் இதற்கு விளக்கம் கூறுகின்ருர். பிறரும் 'அவ்வன்பு மறஞ்செய்வார்க்கும் துணையாம் என்றும் அறி விலார் செய்யும் மறத்தையும் அன்பு வெல்லும் என்றும் உரை கூறுகின்றனர். அனைத்தும் மாறுபட்ட பகை உள்ளத்தையும் இவ்வன்பு கட்டுப்படுத்தி, அப்பகையை மாற்றும் திறன் உடையது என்பதையே காட்டுகின்றன. உற்றவனிடம் அன்பு செலுத்துவது உலகியல்; அது பற்றிய ஆய்வு தேவையில்லே. ஆனல் மற்றது எண்ணத் தக்கது. ஒருவன் கம்மொடு மாறுபடுகிருன் எனக் கொள் 23