பக்கம்:நாலும் இரண்டும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் வோம். அந்த மாறுபாட்டின் காரணத்தால் அவன் நமக்கு மறவழியில் கொடுமைகள் செய்ய நினைக்கலாம்-செய்தும் இருக்கலாம். அப்போது நாமும் மறவழியில் செல்ல லாகாது; அப்பொழுதும் நாம் அன்புடையவராக இருக்க வேண்டும். மறத்தால் தீங்கிழைப்பான அ ன் பால் அழைத்து அனேக்கும் ஒரு பண்பு நம்மிடம் அரும்பினல் அந்த மறநெறியாளன் உள்ளமும் மாறும் என்பது உறுதி. தன்னை அடைந்தார் வினே தீர்ப்பதுதான் தலையாயவர் தங்கடன் என்பது உண்மையாயினும் அதனினும் மேலாகத் தன்னை அடையாரிடம் அன்புகாட்டி நிற்பது சிறந்த ஒன்ருகின்றது. அந்த அன்பு அவன் மற உள்ளத்தைக் கரைத்து மாற்றும். அவன் சிந்திக்கத் தொடங்குவன். சிந்தனையில் அன்பின் திறம் தெளிவாகும். பின் அந்த மறச்செயல் பற்றி நிச்சயம் காணுவான்; திருந்துவான்; செம்மை நெறியைப் பின்பற்று: வான். உலகில் இந்த உண்மையை உணர்ந்தவர் சிலரே. ஆதலின், உணராதாரை 'அறியார் எனக் காட்டினர் வள்ளுவர். எனவே அன்பு அறத்திற்கு உடன் நின்று, அதை வளர்க்கப் பயன்படுவதோடு மறத்திற்கும் உடன் கின்று அதை மாற்றவும் செய்கிறது. இத்தகைய உயர்ந்த அன்பு உலகில் செயல்வழிச் சிறக்குமானல் அறம் ஓங்கி மறம் மாய்ந்து மக்கள் வாழ்வு-உயிரின் வாழ்வு உயர்ந்தோங்கு மல்லவா? வள்ளுவர் அந்த வளமார் வாழ்வை எண்ணியே இந்தக் குறளே உலகிற்கு வடித்துத் தந்தார். காமும் அவர் வழி கின்று, - " படர்செய் பகையும் உறவாக்கும் பற்றும் அளிக்கும் - மன்ைமைந்தர் தொடர்பின் வளர்க்கும் அன்பதல்ை சோர்ந்தும் அன்பின் வழுவற்க " (விநா. அர. 22) என்று அன்பில் வழுவாது வாழ்வை வளம்படுத்துவோமாக. 24