பக்கம்:நாலும் இரண்டும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவி லதனை 7-2-1974 மனிதன் உலகில் எத்தனையோ செயல்களைச் செய் கிருன். அவற்றுள் பல அவன் உள்ளத்து உணர்த்த வகை யில் அமைகின்றன. சில அவனே அறியாமலேயும் நிகழ் வதுண்டு. அவன் உணர்ந்து ஆற்றுகின்ற செயல்களிலும் பல அவனுக்கும் அவனைச் சேர்ந்தார்க்கும் பிறருக்கும் பயன் விளப்பனவாகும்; சிலகேடு விளப்பனவாக அமையினும் அமையும். எனவே ஆற்றலோடு கூடிய மனிதன் ஒரு செயலைச் செய்யுமுன் அது பற்றித் தானும் ஆராய்ந்து, தக்கா ரொடு குழ்க்து, அச்செயலால் யாருக்கும் தீங்கில்லா வகை யில், வாழ்வில் நன்மை பயக்குவதாயின் அதனைச் செய்யலாம் எனவும், அல்லனவற்றை நீக்க வேண்டுமெனவும் அறிவோர் கூறுவர். -- - தனி மனிதனயினும் சமுதாய மாயினும், அன்றி, நாட்டினை ஆளும் நல்லவராயினும் இவ்வாறு தெரிந்துசூழ்ந்து-ஆய்ந்து-அறிந்து ஒரு செயலை மேற்கொள்ளின் அது கருதிய பயனேத் தரும் என்பது ஒருதலே. இதனை எண்ணிய திருவள்ளுவர் அனைவருக்கும் பொது நோக்கா கவும் அரசருக்குச் சிறப்பாகவும் இத் தெரிந்து செயல் வகையின் இன்றியமையாமையை விளக்கிக் காட்டுகின்ருர். அரசியலில் ஒன்னர்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் வல்லகிைய அரசன் இவ்வாறு எண்ணிச் செயல்படாயிைன், தானும் கெட்டு, அவன் வழியே இந்த நிலமும் துயருறும் என்பதை வள்ளுவர் சுட்டிக் காட்டி, அதல்ை அவன் 25