பக்கம்:நாலும் இரண்டும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் குற்றத்துக்கு-ஏதப்பாட்டிற்கு இலக்காக நேரிடும் எனவும் எடுத்துரைக்கிருர். செய்து குற்றம் எய்துவார் என்ற குறைபாட்டைக் காட்டாது, செய்யாது சிறக்கும் மேன்மையை விளக்கு முகத்தான், 'தெளிவி லதனத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடஞ்சு பவர்" (464) எனக் காட்டுகிருர் ஆம் மனிதன் குற்றத்துக்கு அஞ்ச வேண்டும். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை யன்ருே? அஞ்சத்தக்க குற்றங்களில் இந்த ஏதப்பாட்டையும் எண்ணிப் பார்த்த அவருள்ளமும் அஞ்சுகிறது. அவ்வாறு, அஞ்சும் நல்லவர் தெளிவில்லாத அத்தகைய செயலேத் தொடங்கமாட்டார் எனத் திட்டமாகக் கூறுகின்ருர், ஆம்! தொடக்கமே இல்லை யாயின் செயல் எங்கே நிகழப். போகிறது? தன் இனத்தொடும் சான்ருரொடும் கூடி யாயினும் தனித்தாயினும் ஆராய்ந்து தெளிவு எய்தப் பெருத வினை, எதுவாயினும், அதனைத் தொடங்கக் கூடாது என்று அரசன் மேல் வைத்து, உலகில் வாழும் ஒவ்வொரு வரையும் செயல்பட ஆற்றுப்படுத்துகிருர் வள்ளுவர். ஒருவர் எ த னே யும் எண்ணுது காரியங்களைத் தொடங்கி, பின் அதில் தோல்வியுறின், அருகிலுள்ளவரும் மற்றவரும் அவ்வாறு தோற்றவரைக் கண்டு எள்ளி நகை யாடுவது உலகியற்கை. இன்றும் அத்தகைய நிலையில் மக்கள் உள்ளமையை நாம் அறிகின்ருே மல்லவா? அத் தகைய அவல நிலையை வள்ளுவர், 'இளிவு' என்று கூறு கிருர். இந்த இளிவு என்னும் ஏதப்பாடு ஒருவனுக்கு வந்து சேரின், அவன் சாதாரண மனிதனயினும் அன்றிப் பெரு மன்னனயினும் தலே நிமிர்ந்து வாழ முடியாத ஒரு 26