பக்கம்:நாலும் இரண்டும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகையறைச் சூழாது கிலேயை எய்துவான் என்பது உறுதி. சிற்றினஞ் சேராது. பெரியாரைத் துணைக்கொண்டு, காலம் இடம் முதலிய வற்றின் வலி தெரிந்து, தெளிந்து, சிந்தித்துச் செயலாற்று பவர் யாராயினும் வாழ்வில் எந்த ஏதப்பாட்டுக்கும் அஞ்சா கிலேயில், எடுத்த காரியம் யாதினும் வெற்றி பெற்றவராகி வீறு கடைப் போட்டுத் திகழ்வர் என்பது உறுதி. எனவே தான் வள்ளுவர் அத்தகைய அதிகாரங்களே முன்னும் பின்னும் இருக்க அமைத்து, இடையில் தெரிந்து செயல் வகை என்ற இந்த அதிகாரத்தையும் அமைத்து, ஒன்றன் பின் ஒன்ருக, அடுக்கிய குறட்பாக்களில் அச்செயல்வகையின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுகின்ருர். ஆம்! இன்றைய இக் குறள் வழி உலகில் புகழ் பெற்று வாழ விரும்புவர் எதையும் தெரிந்து செயல்படத் தொடங்க வேண்டு மெனவும், அவ் வாறு தொடங்காதவர் இளிவென்னும் ஏதப்பாட்டுக்கு உள்ளாவர் எனவும் அறிகிருேம். உலகில் வாழும் யாரும் இளிவென்னும் ஏதப்பாட்டினை ஏற்க விரும்பார். எனவே செயலாற்றுவதே சிறந்த வழியாகும் என்பதை உணர்ந்து காமும், நாம் ஆற்றும் செயல்பற்றித் தெளிந்து ஆய்ந்து கிமிர்ந்து வாழ, தெரிந்து பின் அறிந்து அதன் வழியே செயல்படுவோமாக! - வகையறைச் சூழாது 8–2–1974 உலகில் எப்போதும் மாற்றுச் சக்திகள் ஒன்ருெடு ஒன்று மோதுகின்றன. அவை பெருஞ்சக்திகளாக இயங்கின், உலகமே நடுங்கத்தக்க பல கொடுமைகள் நிகழும். சிறியன வாயின் அதற்கேற்பக் கொடுமைகள் அமையும். தனிமனித 27