பக்கம்:நாலும் இரண்டும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகையறைச் சூழாது வலி குறைந்த மன்னனைத் தன் வகையறச் சூழாத செயலால் பாத்தியிட்டு வளர்த்து, வெற்றி பெறும் செயலே வழங்கு கின்ருன், தெரிந்து செயல்வகை அறியாத மன்னன் என் கிருர் வள்ளுவர். இதோ அவர் வாக்கு. ' வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் பார்த்திப் படுப்பதோர் ஆறு ' இக்குறள் வழியே வள்ளுவர், இக்குறள் அமைந்த அரசியலுக்கு ஏற்ப, அரச முறையை வற்புறுத்துகிருர் எனக் கொள்ளினும், இவ்வுண்மை அரச வாழ்விற்கு மட்டு மன்றித் தனிமனித வாழ்வுக்கும் பொருந்துவதாகும். உலக வாழ்வில் ஏறக்குறைய எல்லா நிலைகளிலும் மாற்றுச் சக்தியும் போராட்ட மனப்பான்மையும் வேறுபாட்டுணர்வும் போட்டியிடுவதை அறிவோம். அப்போராட்ட நெறி எங்கணும், இந்த உண்மை போற்றப் பெறல் வேண்டும். எச்செயலையும், எளிதாயினும்-வலியதாயினும் அதைத் தொடங்கு முன் எண்ணித் துணிய வேண்டும் என்று கூறும் வள்ளுவர், மாற்றுச் சக்தியை வெல்லத் தொடங்கும் ஒரு வினைக்குத் தெரிந்து செயல் வகை இன்றிமையாதது என்பதை வற்புறுத்துகிருர். அவ்வாறு தெரிந்து குழாது செயலாற்ற ஒருவன் தொடங்குவனயின், மாற்ருன் எத்துணே எளியவனுயினும், அவனே வெற்றி பெற வலிய னக்கிய செயல், தொடங்கிய இவனேயே சாரும் என்பது வள்ளுவர் துணிவு. உலக கிலேயும் இதுதானே! போர்ச் செயல் மட்டுமன்றி, வாழ்வின் மாருட்ட து களுக்கு இடையிலும் மனிதன் மேற்கொள்ள வேண்டிய எந்தச் செயலும் இந்த நியதிக்கு உட்பட்டதே யாகும். வள்ளுவர் ஒன்றை ஒரு பொருள் மேல் ஏற்றி, அதனை உலக , 29 (465)