பக்கம்:நாலும் இரண்டும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் நெறியாகக் காட்டும் இயல்பின ரானமையின், இதை இயலுக்கு ஏற்ப அரசன்மேல் ஏற்றுவதாக உரை கொள்வது பொருந்தும் ஆயினும், இஃது அனைவருக்கும் பொருந்தும் பொது நெறியேயாம். எனவே நாம் மாறுபாட்டுக்கிடையில் செயல் தொடங்கும்போது, எண்ணி, ஆய்ந்து, சூழ்ந்து தொடங்க வேண்டுமெனவும், அவ்வாறு தொடங்கின் பகைவர் அல்லது மாற்றுக் கட்சியினர் அல்லது மாறுபாட்டினர் கிலே கெடுவர் எனவும் தெளிதல் வேண்டும், இன்றைய போராட்ட உலகில், மாறுபட்ட கொள்கைகள் நிலவும் உலகில் கல்லதை வாழவைக்கும் அறப்போர் தொடங்கும் ஒவ்வொருவரும் வள்ளுவர் காட்டிய இந்த வழியில் எண்ணிச் சூழ்ந்து தெரிந்து செயலாற்றின் நாடும் உலகும் கலம் பெறும் என்று கூறி அமைகிறேன். * செய்தக்க அல்ல 9-2-1974 உலகில் பிறந்த மனிதன், தோன்றிய நாள் தொட்டு மறையும் வரையில் எத்தனையோ எண்ணற்ற காரியங்களைச் செய்து கொண்டே யிருக்கிருன். அவன் செய்கின்ற அத்தனையும் ஏற்கத் தக்கன வென்ருே அன்றி நீக்கத் தக்கன வென்ருே கொள்ள இயலா. அவரவர் செயலால் நலம் விளையும் நிலையும் உண்டு; அவலம் விளையும் நிலையும் உண்டு. எனவேதான் எந்தச் செயலைச் செய்தாலும் தெரிந்து செயல் வகை இன்றியமையாதது என அறிஞர் வற்புறுத்துகின்றனர். வள்ளுவர் உலக மக்கள் இன்னின்னவற்றைச் செய்ய வேண்டு மெனவும் இன்னின்னவற்றை விலக்க 30