பக்கம்:நாலும் இரண்டும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தக்க அல்ல வேண்டு மெனவும் பல்வேறு குறட்பாக்களில் அறுதியிட்டுக் கூறுகின்ருர். அறநூல் பலவும் இந்தச் செயல் வகைகளை மக்களுக்கு ஆய்ந்து அறிவுறுத்துகின்றன. வையத்து வாழ். வாங்கு வாழும் ஒவ்வொருவரும் அவரவர் கிலே, இடம், காலம் இவற்றின் அடிப்படையில் சிலவற்றைச் செய்யவும்: வேண்டும்; வேறு சிலவற்றை நீக்கவும் வேண்டும். செய்ய: வேண்டுவனவற்றைச் செய்யாது விடுவதால் தீமைகள் நேர்வதும் உண்டு. எனவே இரண்டிடத்தும் எண்ணி எவற்றைச் செய்ய வேண்டும் எவற்றை நீக்கவேண்டும் என கினைந்து, உணர்ந்து, ஒவ்வொருவரும் செயல்படுவாராயின், இன்று நாட்டில் தோன்றும் எத்தனே எத்தனையோ கொடுமைகள் இல்லையாக நீங்கும். இந்த உண்மையை வற்புறுத்த கினைத்த வள்ளுவர், அரசியலில் அரசன் செய்ய வேண்டுவனவற்றையும் செய்யத் தகாதவற்றையும் முறை. IᏞᎫfᎱ$ வகைப்படுத்திக் கூறுகின்ருர், பலவற்றைத் தொகுத்துக் காட்டிய பின், பொது நெறியாக இவ்: வுண்மையை வற்புறுத்துகின்ருர். "செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்' - (466) என்பது அவர் வாக்கு. இந்த இரண்டையும் பிணைத்த வள்ளுவர், முதலாவதாகச் செய்யத் தகாத காரியங்களைச் செய்வதால் உண்டாகின்ற கொடுமைகளைச் சுட்டுகிருர் . சிலர்-மன்னர் மட்டுமன்றி பிற மக்களும்கூட-சில காரியங் களேத் தெரிந்து ஆய்ந்து எண்ணிப் பார்க்காது, தொடங்கித் தோல்வியுற்று, அதனல் தாமும் கெட்டுப் பிறரையும் கெடுப்பதை உலக நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இச் செயல்கள் தனிமனிதன் செயலாக அன்றி நாட்டுத் தலைவர் 31