பக்கம்:நாலும் இரண்டும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலும் இரண்டும் அல்லது மன்னர் செயலாக அமையின் பல காடுகளோ உலகமோ அல்லலுற்றுக் கெடு மல்லவா? இந்தப் பெருங் கொடுமையை எண்ணியே வள்ளுவர் இக்குறளே அரசியலில் "தெரிந்து செயல் வகை என்னும் அதிகாரத்தில் அமைத்து, மற்றைய அனைவருக்கும் அதன் பேருண்மையைத் தெளி வாகக் காட்டி அவர்களையும் தெளிந்து செயல்பட வைக்கிரு.ர். செய்யத் தக்கவற்றைச் செய்யாமையால் உண்டாகும் கொடுமையினும் செய்யத் தகாதவற்றைச் செய்தலால் -உண்டாகும் கொடுமையே அதிகமாகும் என்பது வரலாறு காட்டும் உண்மை. அமைதியாக வாழவேண்டிய-வாழ வைக்க வேண்டிய அரசனே அன்றித் தனி மனிதனே தான் செய்யலாகாது என அற நூல்கன் அறுதியிட்டவற்றைச் செய்யும்போதுதான் நாட்டில் போர்களோ குழப்பங்களோ குறைபாடுகளோ உண்டாகும் நிலை இன்றும் உள்ளது. ஆனல் அதே வேளையில் செய்யத் தக்க செயல்களைச் செய்யா மையால் அவ்வளவு தீங்கு உண்டாவதில்லை யல்லவா? இந்த நிலையை எண்ணித்தான் போலும் நல்லது செய்யா விட்டாலும் கெடுதல் இல்லை, அல்லதைச் செய்யாது இருங்கள் என்று கருதி, நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் என்று பழம் புலவர் பாடிச் சென்ருர். ஆம் வள்ளுவர் இதை உள்ளத்தில் வைத்தே தான் முதலில் செய்யத் தகாதன செய்யுங்கால் நிகழும் கொடுமையைக் கூறி, பின் மற்றதை அதைெடு சார்த்திச் சொல்கிரு.ர். - - v. இந்த நீதி அரசர்களுக்கு அமைந்த அதிகாரத்தொடு பொருந்தியதாக காட்டப் பெறினும், வள்ளுவர் கூறும் ஒவ் 32