பக்கம்:நாலும் இரண்டும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடியுளாள்: 10-7-14 திருவள்ளுவர் தாம் சொல்ல வந்த கருத்தினை எளிமை யோகவும், அதே வேளையில் வேடிக்கையாகவும் கேட்போர் மனத்தில் பதியும் படியாகவும் சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். அவருடைய கருத்துக்களை மக்கள் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டிய வழியை அவரே அறிவார். சொலல் வல்லன் சோர்விலன்' என்ற அவர் தொடர் அவருக்கே பொருத்தமாக அமைவது. அஞ்சி யாகிலும் அன்பு பட்டாகிலும் மக்கள் தாம் சொல்லும் கருத்தினை ஏற்று நடந்தால் போதும் என ஒருவேளை அவர் எண்ணியிருப்பார். எனவே சில செயல்கள் செய்யாமை யால் வரும் கொடுமைகளைக் காட்டி அச்சுறுத்துவர்; அப்படியே தற்செயலால் வரும் ஆக்கத்தைக் காட்டி ஆசை கொளச் செய்வார்; அவற்றை வேடிக்கையாக விளக்கவும் "செய்வார். இத்தகைய குறட்பாக்கள் பல - அவற்றுள் ஒன்று இன்று நாம் காண இருப்பது. வள்ளுவர் மனிதனுக்கு வேண்டிய ஊக்கமுடைமையைக் காட்டி, வேண்டாத மடியினைச் சுட்டி, சோம்பல் இன்றி ஊக்கத்துடன் உழைக்க வேண்டும் என்று முன்னர் விளக்கினர். எனினும் பல்வேறு காரணங்களாலும் ஊழைப் பற்றிய கிலேயிலும் ஊக்கமுடைமை வெற்றியுருதோ என ஐயுறுவாருக்கும், ஊக்கம், மடி இவை இரண்டினையும் இணைத்துப் பார்த்துப் பயன் காண கினைப்பாருக்கும் "ஆள்வினை யுடைமை என்ற அதிகாரத்தினையும் அமைக்க 34