பக்கம்:நாலும் இரண்டும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடியுளாள் வழி கோலியுள்ளார். வினையின் அருமை நோக்கி அச்சமுறு வாரைத் திருத்த முற்பட்டு, அஞ்சாது தன் வினையாற்று வான் பெறும் சிறப்பையும் ஆற்ருதான் பெறும் அவலத்தை யும், தனக்கென இன்பம் விழையாத தாளாண்மையால் வினையாற்றுவான் பெறும் ஏற்றத்தையும் சுட்டிக் கொண்டே வந்த வள்ளுவர், இன்றைய குறளில் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அடிப்படையாக உலகு கருதும் இருவர் மேல் தம் கருத்தை ஏற்றித் தெளிய வைக்கிருர், வேடிக்கை யான முறையில். மூதேவி சென்றிருந்து வாழ்வாளே...... மன்ருேரம் சொன்னர் மனை ' என ஒளவையார் மூதேவி குடிபுகும் வீட்டிற்கு இலக்கணம் கற்பித்தார். வள்ளுவர், அவன் ஒருவேளை அந்த வீட்டை விட்டு விலகவும் கூடும் என்னும் கருத்தால் அவன் அடி மடியிலேயே கை வைத்துக் கருத்தை விளக்குகிருர் மடி’ என்ற சொல்லுக்கு உரிய இரு பொருள்களையும் இங்கே கொள்வோர் உளங்கொள வேடிக்கையாக விளங்க வைக்கிருர். பூனேயை மடியிலே கட்டிக் கொண்டு சகுனம் பார்ப்பது என்பது தமிழ் காட்டுப் பழமொழி. மடி ஒருவனு டைய உரிமையான - மற்றவர் எளிமையாகப் பற்ற இயலாத - பிரிக்க முடியாத இடம். அதிலேயே மூதேவி சென்று தங்குவாள் என்கிருர். யார் மடியில்? மடியுடை யான் மடியில் - மடி' என்ருல் சோம்பல் என்பது பொருளல்லவா? ஆம். மடியுடையான் மடியில் அவ்வாறு தங்கும் அவளேமா முகடி என்றே பரிகசிக்கிருர் வள்ளுவர். அவள் மடியில் சேர்ந்தால் அவன் வாழ்வ தெங்கே? உலகில் வாழப் பிறந்தவன் சோம்பலின் காரணத்தால் இப்படி மடியலாமா? அதிலிருந்து விடுதலே இல்லையா? ஏன் இல்லை? 35