பக்கம்:நாலும் இரண்டும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறியின்மை அடுத்த அடியிலேயே வள்ளுவர் அந்தக் கொடுமையிலி ருந்து விடுதலைக்கு வழி காட்டுகிருர். மடியிலாதான் மூதேவியை விரட்டுவதோடு, செல்வத்துக்குரிய சீதேவியை யும் தனக்கு உரிமையாக்கிக் கொள்கிருன். ஆம்! இலக்குமி மடியற்ற ஆள்வினை உடையான் தாள் உறைந்து அவன் காலாலிட்ட பணியைத் தலையால் செய்வாள் என்ற குறிப் பினேயே மடியிலான் தாள்உளாள் தாமரை யினுள்" என்கிருர். ‘தாள் உளாள் என்ற தொடரால் தாளாண்மை யுடையான் வழி நிற்பாள் என்றும் அவன் செல்வத்தால் பெறும் செயலின் சிறப்பையும் அரியளாய அவளேப் பெற்ற எளிமையையும் வள்ளுறர் வற்புறுத்துகிருர். எனவே ஆள்வினையோடு வினைக்கு அஞ்சாது - சோம்பி இராது, தன் முயற்சியால் செயலாற்றும் ஒருவனே வறுமையும் சிறுமையும் பற்ரு என்பதையும் அதே வேளையில் செல்வமும் சிறப்பும் அவ்வாள்வினை யுடையான்கண் தாமே வந்து அமைந்து, வாழ்வின் நலமனைத்தையும் நல்கும் என்பதையும் இக்குறள் வழியே திட்டவட்டமாகக் காட்டுகிருர் வள்ளுவர். இதே அவர் வாக்கு, " மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னுள் ' (617) உலகில் நலமெலாம் பெற்று கல்வாழ்வு வாழ விரும்பு பவர் ஆள்வினை உடையராய்ச் சிறப்பராக அவர்வழி நாடு கல முறுவதாக! பொறி யின்மை 11-7-74 ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் ஒரு தேர்விற்குச் செல்ல வேண்டியவர்கள்; சென்ருர்கள். ஆயினும் இருவரும் அத்தேர்வில் வெற்றி 36