பக்கம்:நாலும் இரண்டும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறி யின்மை பெறவில்லை. ஆனல் தேர்ச்சியில் வெற்றி பெருமைக்குப் பெற்ருேர் அவ்விருவரையும் பழிக்கவில்லை. மாருக ஒருவனைப் பழித்தனர் - ஒருவனைப் பாராட்டிப் போற்றினர். ஏன் இந்த வேறுபாடு? பெற்ற பிள்ளைகள் இருவரையும் ஏன் அவர்கள் ஒத்துக் காணவில்லை? காரணம் ஒன்றே. - பிள்ளைகளுள் ஒருவன் தனக்கு ஏதோ கெட்ட காலம் என்றும் தனக்கு ஆகூழாகிய கல்விதி கிடையாதென்றும் சொல்லிக் கொண்டு அத்தேர்விற்கு யாதொரு ஆயத்தமும் செய்யாது - படிக்காது - வினகப் பொழுது போக்கித் தேர்வுக்குச் சென்ருன். ஆனல் மற்றவனே தனக்கு ஆகூழ் இல்லையாயினும் முயன்ருல் - ஆள்வினை யுடைமையால் ஆவன செய்யின் வெற்றி யடையலாம் என்ற நம்பிக்கையில் தேர்வுக்குரிய முயற்சியில் ஈடுபட்டு நன்கு படித்தர்ன். ஆயினும் அவனும் வெற்றி பெறவில்லை. எனவே பெற்றவர் சோம்பலைத் துணையாகக் கொண்டு தூங்கிய முன்னவனைப் பழித்துப் பின்னவனே அவன் என்ன செய்வான்? முயன்ருன்; வெற்றி பெருதது அவன் குற்றமில்லே' எனப் பாராட்டினர். வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் இந்த உண்மை பொருந்தும். அதேைலயே வன்ஞவர். f " பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து • ஆள்வினை இன்மை பழி ' (618) எனத் திட்ட வட்டமாாகக் கூறியுள்ளார். பொறி என்ற சொல்லுக்கு விதி, புண்ணியம், தெய்வ உதவி எனப் பலவகையில் பொருள் கொள்ளலாம். "உறுப்புக்கள்' என்றும் பொருள் கொள்வர். எனினும் முன் காணும் பொருள்களே சிறப்புடையன. அடுத்த குறளில் விதி அல்லது தெய்வ அருள்.இன்றேனும் முயன்ருல் வெற்றி 37