பக்கம்:நாலும் இரண்டும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் யுறலாம் என்ற கருத்தை வலியுறுத்த நினைத்த வள்ளுவர் அதற்கு முதற்படியாக அக்கருத்துடைய குறளே இங்கே வைக்கிருர். எனவே விதி மாருக இருப்பினும் இடையருது முயல வேண்டும் என்றும் அதனல் விளையும் பயன் பற்றிக் கவலை யுருது நம் கடமை முயற்சி என்றே செயலாற்ற வேண்டும் என்றும். ஒருவேளை அம்முயற்சி வெற்றி வாய்ப்பைத் தேடித் தரும் என்றும், தராவிட்டாலும் வளர்ச்சி உண்டு என்றும் இக்குறளில் வள்ளுவர் சுட்டிக் காட்டி, அடுத்த குறளில் அவ்வுண்மையைத் தெளிய வைக்கிரு.ர். மனித வாழ்வில் மட்டுமன்றி உயிரின வாழ்விலும் முயற்சியே வளர்ச்சியைத் தருகின்றது. நம்மால் முடியாது என்று எண்ணியோ அன்றி நமக்கு வெற்றி பெறும் நல்ஊழ் இல்லை என்ருே கருதி ஒவ்வொருவரும் எச்செயலையும் செய்யாமல் வாளா இருப்பராயின் உலகம் முன்னேற முடியுமா? முடியா தன்ருே? எனினும் அவ்வாறு எண்ணிக் கொண்டே வீண் பொழுது போக்கும் மடியாளர்கள் இன்று நம்மிடை வாழ்வதை நாம் காண்கின்ருேம் - வள்ளுவர் காலத்திலும் இருந்திருப்பார். அதேைலதான் வள்ளுவர் ஆள்வினையுடைமையை வற்புறுத்தும் முகத்தான் இதல்ை முற்றிய பயன் இன்றேனும் பழி இல்லை என்பதையும் அத்துடன் வளர்ச்சி உண்டு என்பதையும் இக்குறள் வழியே சுட்டிக் காட்டுகிருர். - - ஒரு செயலைச் செய்ய முயலுபவன் எடுத்த எடுப்பி லேயே வெற்றி பெறுவான் என்று சொல்ல முடியாது. சில வேளைகளில் தோல்வியும் பெறுவான். ஆனல் அத்தோல்வி யில் வெற்றியின் முதற்படி அமைந்திருக்கும் உண்மையினை யும் அதனல் தான் பெற்ற வளர்ச்சியினையும் அவன் 38