பக்கம்:நாலும் இரண்டும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத்தான் அப்போது அறிய முடியாது. மேலும் மேலும் அதே வகையில் தன் ஆள்வினை உடைமையால் முயன்று இறுதி யிலே வெற்றி காணும்போதுதான் அவன் அந்த உண்மையை உணர முடியும். ஒருவேளை அவன் வெற்றியே பெரு விட்டாலும் அவன் வினையாற்றலே முறையாகக் கண்டு வந்த உலகம் அவன் தோல்வியைப் பழிக்காது பாராட்டும் என்பது உறுதி. எனவேதான் வள்ளுவர் எங்கோ கண்ணுக்குப் புலப்படாத விதி ஒன்றன்மேல் பழி வைத்துச் சோம்பி இருப்பதை விட, தன்னிடம் உள்ள - தானே உற்றறியும் - வினையாற்றும் அளவறிந்து நம்பிக்கை வைத்துச் செயலாற்றுபவன் என்ருயினும் ஒருநாள் வாழ்வில் வெற்றியடைய முடியும் என்று திட்டமாகக் கூறுகிருர். ஆம் நம்மிடம் உள்ள வினையாற்றலே - ஆள்வினை உடைமையின் திறனே அறிந்து செயலாற்றின் எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறுவோம் என்பது உறுதி! தெய்வத்தான் 12-7-1974 ஆள்வினை யுட்ைமையின் ஆக்கத்தைப் பல வகையான் வற்புறுத்துகின்ற வள்ளுவர் அவற்றின் உச்சியில் இக் குறளால் வினையுடையான் பெறும் வெற்றியைச் சுட்டிக் காட்டுகின்ருர். ஊழ் வழியாலோ அன்றித் தெய்வத் துணை யின்மையாலோ வெற்றி கிட்டாது என்ற ஒரு நிலையிலும், ஒருவன் தன்வினை வழிச் செயலாற்றித் திண்ணிய உளத் தால் அவ்வினையினை மேற்கொள்வானுயின், அவன் அச் செயலில் வெற்றி பெறுவான் என்பது வள்ளுவர் உள்ளக் 39