பக்கம்:நாலும் இரண்டும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் கிடக்கை. ஒருவேளை தெய்வம் அவனுக்கு உதவ வேண்டா என்று எண்ணி யிருந்தாலும் அவனுடைய ஆள்வினை யுடைமையினையும் தளரா முயற்சியினையும் கண்டு, தன் எண்ணத்தை விட்டு அவன் வெற்றி பெற வழி காட்டும் என வள்ளுவர் கருதுகின்ருர். இக்கருத்தினை வேறு வகை யில் குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில், தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் எனக் காட்டுவர். ஆகவே வள்ளுவர் கருத்து, முயற்சி தெய்வத் திறனையும் வென்று. தன் செயலில் வெற்றி யளிக்கும் என்பதாகும். தெய்வம் என்பதற்குக் கடவுள் என்பாரும் வினே அல்லது ஊழ் என்பாரும் புண்ணியம் என்பாரும் உளர். எப்படியாயினும் அவற்றின் நிலைகளுக்கு மேலே ஆள்வினை உடைமையின் திறனே ஈண்டு வள்ளுவர் சுட்டிக் காட்டுகின்ருர். அடுத்த குறளிலே ஊழையும் உப்பக்கம் காண்பார் என்றும் முந்திய குறளில் பொறியின்மை யார்க்கும் பழியன்று' என்றும் வள்ளுவர் ஊழினச் சுட்டிக் காட்டுகின்றமையின், ஈண்டு அவ்வூழினுக்கும் அதற்கும் காரணனை மனிதனுக்கும் பிற அனைத்துக்கும் முதலாக உள்ள தெய்வத்தினேயே இந்தக் குறளில் குறித்தார் என்று கொள்வது பொருத்த மானதாகும். *।। இதல்ை, ஒரு சிலர், இப்படிக் கூறினல் மனிதன் தெய்வத்திலும் மேம்பட்டவகை எண்ணத் தக்க நிலையில் வள்ளுவர் வாழ்ந்தார் எனக் கொள்ளலாம் அன்ருே எனக் கூறலாம். எண்ணிப் பார்த்தால் அதற்கு இடம் இல்லை. தெய்வம் அனைத்திற்கும் மேம்பட்டது; அப்பாற் பட்டது. என்பது வள்ளுவருடைய அசைக்க் முடியாத நம்பிக்கை. ஆனல் தான் சோம்பி யிருந்து, அச்சோம்பலுக்குக் காரணம் ஆண்டவனே அன்றி விதியோ என்று காட்டித் தப்பித்துக் 40 .