பக்கம்:நாலும் இரண்டும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத்தான் கொள்ளுபவரை இடித்துரைத்துத் திருத்தவும், தெய்வ கம்பிக்கை யுடையாரும் தம் ஆள்வினை உடைமையையும் நம்பிச் செயலாற்றிச் சிறக்கவுமே வள்ளுவர் இக்குறளை வைத்திருக்கிரு.ர். - 'தெய்வத்தான் ஆகாதெனினும் என்ற தொடர் வழி வரும் உம்மை யாலேயே மேற்கொள்ளும் செயல் முற்றும் ஆகாத ஒன்றன்று என்பதையும், தெய்வம் தன் படைப்பின் கீழ் உள்ளவர்தம் ஆக்கத்துக் கன்றி அழிவுக்கு வழி காட்டாது என்பதையும் வள்ளுவர் சுட்ட நினைக்கின்ருர். தம் செயற் குறைவாலும் சோம்பலாலும் ஒருவன் விணே இருந்து அதற்குத் தெய்வத்தைத் துணை தேடும் கொடிய வழக்கம் இன்றும் காட்டில் இருக்கிற தல்லவா? இந்த கிலேயில் உள்ளவரைப் பார்த்தே வள்ளுவர் இக்குறளைச் சொல்லியுள்ளார். - வள்ளுவர் ஆள்வினை உடைமை பற்றிக் கொண்ட கருத்து மிகத் திண்ணியதாகும். உலகில் பிறந்த ஒருவன் தன்னைச் சோம்பலுக்கு உள்ளாக்காது, தன் உள உரத்தை யும் உடல் உரத்தையும் நம்பி, எந்தச் செயலைச் செய்ய முயன்ருலும் அதில் வெற்றி பெறுவான் எனத் திட்டமாக அவர் நம்புகிருர். அவ்வாறன்றி வினை, ஊழ், தெய்வம் இவற்றைக் காட்டிச் சோம்பி யிருப்பின், அத்தெய்வமே அவனுக்குத் துணை நிற்காது எனவும் நம்புகிருர் ஊழ் இன்றேனும் உர நிலையில் நின்று வினை செய்வானுக்கு அத் தெய்வம், தானே வந்து உதவும் என்றும் நம்புகிருர். அதேைலயே, - "தெய்வத்தான் ஆகாத தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்' என்கிருர். (619) 41