பக்கம்:நாலும் இரண்டும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் மெய்வருந்தக் கூலி தரும் என்பதற்கு உடல் வருந்தும் அளவிற்காவது பயன்விளையும் எனச் சிலர் கொண்டாலும், வள்ளுவர் அக்கருத்தில் சொல்லியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. ஆள்வினை உடைமையால் முயல்கின்ற ஒருவன் உறுதியாக எடுத்த காரியத்தில் முற்றும் வெற்றி பெறுவான் என்பதே அவர் அசைக்க முடியாத நம்பிக்கை. நாமும் அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஆள்வினையுடை ராகி வாழ்வில் வெற்றி பெறுவோமாக! 42