பக்கம்:நாலும் இரண்டும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகச் செய்து 18-1-75 'உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்றும், கெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்றும் உள்ள உற வாடலே நட்புக்கு இன்றியமையாது வேண்டப்படுவது என்று வற்புறுத்தி, நட்பு என்னும் அதிகாரத்தில் காட்டிய வள்ளுவர், இங்கே கூடா நட்பு என்ற அதிகாரத் தில் நட்பினுள் சாப்புல்லற் பாற்று என்று சொல்லுகிருர், மனத்துக்கண் மாசிலா உயர் அறத்தை உலகுக்கு உணர்த்திய வள்ளுவரா இப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டி நடிக்கச் சொல்கிருர் என்று எண்ணத் தோன்றும். இந்த அதிகாரத்தின் தலைப்பே கூடா நட்பு' என்பதாகும். தி நட்பினைத் தனியாகக் கூறுபடுத்திக் காட்டிய வள்ளுவர், உளத்தால் கூடாத நட்பினேயே ஈண்டு வற்புறுத்துகிருர். அரசியலில் மாற்ருர் எந்த வகையினும் தம்மைக் கவிழ்க்கச் சதி செய்வது என்ற கிலே வரலாறு காட்டும் உண்மையாதலானும், உலக கிலேயில் உள்ள எல்லா வகைத் தன்மைகளையும் வள்ளுவர் காட்ட விழைந்தமை யானும், கல்லாரொடு நட்பினைச் செய்து அவர் துணையால் காட்டையும் உவகையும் கலம்படுத்தும் அரசர், கூடா நட்பு வலிய வந்து சேரின் என் செய்ய வேண்டும் என்பதையே ஈண்டு வற்புறுத்துகிருர். இந்த கிலே சிறப்பாக அரசர் மேல் ஏற்றிச் சொல்லப் பெறினும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உலகில் மிக்கிருக்கும் நிலையில் வாழும் நமக்கும்-பொது மக்களுக்கும் ஏற்ற ஒன்ருகவே இதைக் கொள்ள வேண்டியுள்ளது. 43,