பக்கம்:நாலும் இரண்டும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் குறளில் சுட்டிக் காட்டிய வள்ளுவர், அந்த நிலையை என்றும் கைக்கொள்ளலாமா என்ற வினவிற்கு இன்றைய குறளில் பதில் தருகிருர், உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்பதுதான் வள்ளுவர் கருத்து அறநெறியும் அதுதான் ஆனல் மாற்ருன் ஏமாற்ற நினைக்கும் நிலைக்கு மாற்று மருந்தாகவே முந்திய குறளே வள்ளுவர் குறித்தார். ஆயினும் அதுவே மேல்வரிச் சட்டமாக-என்றும் எதற்கும் என்ற வழியாகக் கொள்ளக்கூடாது என்று காட்டவே இந்தக் குறளில் விடல் என்று காட்டி, அந்த நிலையை மேற். கொண்ட செயல் முடிந்ததும் விட்டுவிட வேண்டும் என்று. வற்புறுத்துகிருர். - முந்திய குறளில் மிகச் செய்து தம் எள்ளுவாரை யார் என வள்ளுவர் காட்டாவிடினும் இங்கே பகை நட்பாங் காலம் வருங்கால் என்று திட்டமாகவே பகையினைச் சுட்டிக் காட்டுகின்ருர்: ' நட்புப் பிரிதல் பகைநட்டல் ஒற்றிகழ்தல் பக்கத்தார் யாவரையும் ஐறுதல்-தக்கார் நெடுமொழிக் கோறல் குணம்பிறிதாதல் கெடுவது காட்டும் குறி " என்று பகை கட்டலைக் கெடுவது காட்டும் குறியென அறிந்து வைத்தும் அக்கெடுதலை நீக்க வழி சொல்லாது வள்ளுவர் வாளாயிருக்க முடியுமா? முள்ளே முள்ளால் எடுக்க வேண்டும் என்ற நம் பழமொழிக்கு ஏற்பவே வள்ளுவர் இக்குறளே-இந்த அதிகாரத்தினை நமக்காக எழுதி யுள்ளார். பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட் பொரீஇ விடல் ' (830), 46