பக்கம்:நாலும் இரண்டும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைத்தார் பிரிவும் வேண்டியவற்றையும் சில தள்ளவேண்டியவற்றையும் மேலே இரண்டு அடிகளில் சுட்டிக் காட்டுகின்ருர். மனிதன் மனிதனுக வாழ-இன்ன உலகை இனியதாக்க உள்ள கல்ல. நெறியிலே, இப்பாடல் நம்மையெல்லாம் ஆற்றுப் படுத்து, கின்றது. இதோ அந்தப் பாடல். படித்தார் பயன் பெறுவர்!! வையம் பயன் பெற்றுச் சிறக்க இதனினும் சிறந்த வழியில்லை, " அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதியார் கேண்மை என்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல் ' (18-2), ஆம்! என்றும் பெரியார் வாய்ச்சொல் பெற்றுப் பயன் துய்ப்போமாக! அடைத்தார் பிரிவும் 18 – 3–76 வாழ்க்கை நல்லதாக அமையவேண்டும் என்பதே அனை வருடைய விருப்பமாகும். யாரும் வாடவேண்டும் என வரம் கேட்பதில்லை. துன்பம் நீங்கி இன்பம் பெறவோ எல்லா உயிர்களும் விரும்புகின்றன. சிலர் தம் இன்பம் கருதி, மற்றவர்களுக்குத் துன்பம் இழைக்கும் அளவிற்கும் முன்னேறிச் செல்வர். இதனால் மற்றவர் மட்டுமன்றி, முடிவில் அவர்களே துன்பத்துக் குள்ளாவர். அதற்கிடை யில் இயற்கையாக வரும் இன்னல்களும் பல. நமக்கு உற்ருர் எனச் சொல்லிக் கொள்பவர் சொல்லாமல் கொள்ளாமல், உலகைவிட்டே நீங்கி விடுகின்றனர். தாம் போற்றிய 63