பக்கம்:நாலும் இரண்டும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் உடலும் பொருளும் உற்ருரும் மற்ருரும் இருக்க, அவர் மறைகின்றனர். இந்த இயற்கை நிலை மாற்றமுடியாத ஒன்று. மற்றும், வாழும்போதும் நாம் நம் உடல் நிலைக்கு ஏற்பப்பல்வேறு பிணிகளில் பட்டு உழல்கிருேம். வாழ்க்கைச் :சூழலில் வந்து மோதும் கேடுகள் பல. இத்தனைத் துன்பங் களுக் கிடையில் வாழும் மக்கள், உலகம் துன்பம் நிறைந்தது' என விலக்கி எங்கும் ஓடுவதில்லை-ஏங்கே - ஓடுவது ஒடவும் முடியாது. ஆனல் அந்தச் சூழலுக்கு இடையிலே இன்ன தம்ம இவ்வுலகம், இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே என்று அறங்கூறும் நல்ல நெஞ்சங்கள் அன்று முதல் இன்று வரையில் நம்மிடையே உலவுகின்றன. துன்பத்தில் இன்பம் காணுதலே உயர்தோர் வாழ்வு. 'இடுக்கண் வருங்கால் நகுக! அதனை அடுத் தூர்வ தஃதெப்ப தில் என்று என்று வள்ளுவர் காட்டியபடி துன்பத்தில் சிரித்தும் சிந்தித்தும் வாழ்பரே நல்லவர். அவர்கள் அறநெறி போற்றி, அஞ்சுவது அஞ்சி வாழும் அறிவினர் ஆவர். அவர்கள் வாழ்வின் சோதனைகளி ளெல்லாம் வெற்றி பெற்று உயர்கின்றவராவர். எல்லாச் சமயங்களிலும் சமுதாயங்களிலும் இத்தகைய நல்லவர்கள் இல்லாமல் இல்லை. அவர்தம் வாய் மொழிகள் அன்று முதல் இன்று வரை ஏட்டில் எழுதப் பெற்றும் காட்டில் பயிலப் பெற்றும் வருகின்றன. எனினும் பெரும்பாலன மக்கள் மனநிலை என்ன? - மேலே இத்தகைய பெரியார் வாய்ச் சொல்லைப் பெறு மின் என்று அறிவு கூறிய ஆசிரியர், ஒருவேளை அவர்களே விட்டுப் பிரிய நேரின் மறுபடியும் துன்ப நிலையில் தோய நேருமோ என அஞ்சுகிருர். அவர் ஏக்கம் 'அம்மா என்ற சொல்வழியே வெளிப்படுகின்றது. அதற்கு வழியில்லையா 64