பக்கம்:நாலும் இரண்டும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைத்தார் பிரிவும் என அவர் எண்ணுகின்றர். ஏன் இல்லே? ஆம்! அதுதான் அவர்களைப் பற்றிக் கொள்வது. "ய்ான் உனைத் தொடர்ந்துசிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவ தினிபே என மணிவாசகர் இறைவனைச் சிக்கெனப்பிடித்துக்கொண்டு, துன்பத்தில் இன்பங்கண்டு களிப்பெலாம் மிகக் கலங்கிடுகின் றேன்' என்று உள்ளத்தைத் திறந்து காட்டியபடி, நாமெல் லாம் நல்லவர்களைச் சிக்கெனப்பிடித்துக்கொள்ளவேண்டும், எப்படி? வெறும் கைகளால் கட்டிப் பிணைப் பதன்று, கயிறு கொண்டு கட்டிப் பிணிப்ப தன்று; அறையிடை யிட்டுப் பிணிப்ப தன்று. அவற்றிற்கெல்லாம் மேலாக நம் நெஞ்சத் தால் கட்டிப் பிணிக்கவேண்டும். சகாதேவன் எவ்வுயிர்க்கு. தாய அடியிணைகள் தன் கருத்தினல் பிணித்தான் என்பார் வில்லியார். ஆம் நாமும் நல்லவரை நம் நெஞ்சத்தால் கட்டிப் பிணிக்கவேண்டும். அவ்வாறு கட்டிப் பிடித்தால்-கல்லவர் இணக்கத்தால்-அல்லன நல்லனவாகும்; அரும்பிணியும் கேடும் அணுகா. இன்ன உலகம் இனிய உலகாகும். நாம் அத்தகைய நல்வழி காட்டும் நல்லதாகிய அந்தப் பாடலைக் கண்டு பயன் பெறுவோமா! இதோ அப்பாட்டு " அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும் முடங்குடம்பு கொண்டார்க்கு உறலால்-தொடங்கும் பிறப்பின்ன தென்றுணரும் பேரறிவினரை உறப்புணர்க வம்மாஎன் நெஞ்சு " (18-2). ஆம் அவர்கள் பிறப்பின் இன்னமை உணர்ந்து இனிமை கண்ட பேறிவினர். அவரை உற-முற்றும் பற்றிச் சிறந்து, உயர்வோமாக! 65